Published : 29 May 2022 10:31 AM
Last Updated : 29 May 2022 10:31 AM

ப்ரீமியம்
பெண்கள் 360 | பாலியல் தொழிலாளிகளும் மனிதர்களே

இந்திய அரசியலமைப்புச் சட்டக் கூறு 21இன்படி அனைவரையும் போல் கண்ணியத்துடனும் மனிதநேயத்துடனும் நடத்தப்படுவதற் கான அனைத்து உரிமைகளும் பாலியல் தொழிலாளிகளுக்கும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றையொட்டிப் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இப்படித் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகம். பாலியல் தொழிலில் பெண்களை அதிகமாக ஈடுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறவர்களின் வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் இருக்கிறது. குறிப்பாக விசாரணை என்கிற பெயரில் அவர்களை காவல் துறையினர் கையாளும் விதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இந்நிலையில் மே 19 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்கள் முக்கியமானவை. “தன் விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் குற்றவாளிகள் அல்ல. பாலியல் தொழிலை நடத்துவதுதான் சட்டத்துக்குப் புறம்பானது. ஆள்கடத்தல் தடைச்சட்டம் 1956இன்கீழ் விசாரிக்கப்படும் பாலியல் தொழிலாளி களிடம் காவல்துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை உடல்ரீதியாகவோ வார்த்தைரீதியாகவோ பாலியல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. பாலியல் தொழிலாளி ஒருவர் பாலியல் புகார் கூறினால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படி அணுக வேண்டுமோ அதே அளவுகோல்படிதான் பாலியல் தொழிலாளியையும் அணுக வேண்டும். ஆள்கடத்தல் தடைச் சட்டத்தால் மீட்கப்படும் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இல்லங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். விருப்பம் உள்ளவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாலியல் தொழிலாளர்கள் குறித்த சட்டத்தையோ திட்டத்தையோ உருவாக்கும்போது அந்தக் குழுவில் பாலியல் தொழிலாளி அல்லது அவருடைய பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x