Published : 16 May 2022 07:23 PM
Last Updated : 16 May 2022 07:23 PM
உலகம் எவ்வளவு முன்னேறினாலும் ஒடுக்கப்படுகிறவர்களின் நிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. மே 14, சனிக்கிழமையன்று அமெரிக்க இளைஞர் ஒருவர் நிறவெறி காரணமாகப் பத்து பேரைச் சுட்டுக்கொன்றதுடன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியது சமீபத்திய சான்று. இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது ஆப்ரிக்க அமெரிக்கப் பேராசிரியர் சலமீஷா டில்லட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
ஆங்கிலப் பேராசிரியரான சலமீஷா, விமர்சகருக்கான புலிட்சர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் இவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. நிறவெறியும் கறுப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையும் கலைவடிவங்களில் எப்படி வெளிப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறார் சலமீஷா. சமூகப் பார்வையும் ஆழமான புரிதலும் கொண்ட அப்படியான கட்டுரைகள்தாம் இவர் புலிட்சர் விருது பெற காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT