Last Updated : 17 Apr, 2016 03:00 PM

Published : 17 Apr 2016 03:00 PM
Last Updated : 17 Apr 2016 03:00 PM

எங்க ஊரு வாசம்: துண்டு போட்டு விலைபேசும் மக்கள்!

மாடு வாங்க வருகிறவன் எப்படிப்பட்டவன், நம்மிடம் வாங்கும் காளைகளுக்கும் பசுக்களுக்கும் இரையாக படப்போ, காடுகளில் நாத்தோ விதைத்திருக்கிறானா என்று அடுத்தவர்களிடம் விசாரிப்பார்கள். சிலர் அவன் வீடு தேடிப் போய் கண்ணால் பார்த்து இரை இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் விற்பார்கள்.

‘விலை பேசுவது என்பதுகூடத் துண்டு போட்டு மறைக்கும் கைகளினூடே ரகசியமாக இருக்கும். அதாவது ஒரு கையை மொத்தமாகப் பிடித்தால் ‘வாட்சி’ என்று பெயர். இந்தப் பிடி பத்து ரூபாயிலிருந்து பத்தாயிரம்வரை போகும். இரண்டு விரலைப் பிடித்தால் இருநூறிலிருந்து இரண்டாயிரம்வரை போகும். இதற்கு ‘சௌடு’ என்று பெயர். இபப்டியே ‘தட்டை’, ‘பனியன், பொருத்து, பிச்சி, வலுவு, தாயம் என்று ஒவ்வொரு விரலுக்கும் மூன்று, நான்கு என்று விலை கூடிக்கொண்டே போகும். அந்தக் காலத்தில் பொருளாதார வலுவும் அதிகமாக இல்லாததால் பத்தாயிரம், லட்சம் என்று யாரும் விலை பேசுவதில்லை.

பசுக்களும் காளைகளும் விலங்குகள் இல்லை, நம்மை வாழவைக்கும் தெய்வங்கள். அதிலும் விவசாயிகளுக்குக் குலதெய்வங்கள். ஆடுகளும் மாடுகளும் இருந்தால் பிஞ்சைகளுக்கு உரம் மட்டுமல்ல, விவசாய வேலைகளும் நடக்கும் என்பதால் இந்த உயிர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். மனிதர்களின் தகுதியை அந்தக் காலத்தில் நிலம், நீச்சை வைத்து யாரும் எடைபோடவில்லை. அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை வைத்துத்தான் எடை போட்டார்கள்.

இதனால் மாட்டுப் பொங்கல் அன்று அவைதான் இவர்களின் செல்லப் பிள்ளைகள். அதனால் சிறு கன்றுக்குட்டியிருலிருந்து ஆடு, பசு என்று எல்லாவற்றையும் பத்திக்கொண்டு போய் சிறு சிறு அலைகள் அடித்தவாறு நிறைந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் குளத்தில் செழிக்க நீச்சல் அடிக்கவிடுவார்கள். பிறகு அதன் உடம்பில் இருக்கும் உண்ணிகளைப் பிடுங்கித் தீயில் கருக்கிய பின் அவற்றைப் பாசத்துடன் தடவிக்கொடுப்பார்கள். தங்கள் உடம்பில் சதா கடித்துத் துன்புறுத்திக்கொண்டிருந்த உண்ணிகள் போன சந்தோஷத்திலும் தங்களின் தோல் நீவிய சந்தோஷத்திலும் மாடுகள் ‘ம்மா...’ என்று பாசக் குரல் கொடுத்து, வளர்ப்பவர்களின் அருகில் வந்து அவர்களை உரசியவாறு தங்களின் கண்களின் பளபளப்பினூடே நன்றி சொல்லும்.

மணமான பெண்கள் தங்கள் வீட்டு மாட்டுக் கொட்டகைகளில் மஞ்சள் பூசிய முகத்தோடு ஈரம் சொட்டும் கொண்டைகளிலும் சிறகு பொங்கட்டியோடு கழுத்தில் தொங்கும் தாலியிலும் சிறிது மரிக்கொழுந்தைச் செருகிக்கொண்டு பொங்கல் வைப்பார்கள். குலவைகள் முழங்க, பெரிய பெரிய இரும்புக் கரண்டிகளில் சாம்பிராணி பொடியைத் தூவுவார்கள். அந்தப் புகை சூழ்ந்ததில் கொட்டங்களில் இருக்கும் பாச்சைகள், பூச்சிகள் பறந்துவிடும். சூடம் ஏற்றுவார்கள். நிறைய மாடுகள் வைத்திருந்த சீனி, ஊருக்குள் இருக்கும் அனைத்து மாடுகளுக்கும் சேர்த்தே வாரச் சந்தையிலிருந்து வண்ணம் வாங்கி வந்துவிடுவார். மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் அடிக்கும் செலவை வருசா வருசம் அவரே ஏற்றுக்கொள்வார். கட்சிகளின் வண்ணம் என்பதே அப்போது கிடையாது. கட்சி என்றால் என்னவென்றே தெரியாது. இப்போதுவரைக்கும் எங்கள் ஊரில் கட்சிக் கொடிகள் கிடையாது.

பிறகு மாடு, கன்றுகளுக்கு உடம்பு முழுக்க சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும், நெற்றியில் நீண்ட திலகமும் இடுவார்கள். வண்ணங்களின் அழகும் கொம்பின் நுனியில் புதுக்குப்பிகளும், கழுத்தில் மஞ்சள் நிறம் கொண்ட செவ்வந்திப் பூ மாலைகளுமாக அன்றைய பொழுதில் அவற்றைப் பார்க்கவே கண்ணுக்கு அம்சமாக மட்டுமல்ல, கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றும் தோன்றும்.

ஒரு செயலைப் பெண் செய்கிறாள் என்பதாலேயே சமூக அமைதி குலைந்துவிடும், பண்பாடு கெட்டுவிடும், பெண்களின் புனிதத்தன்மை மறைந்துவிடும் என்று அடுக்கடுக்கான அச்சுறுத்தல்கள் எழுவது எதனால்? அவற்றை மீறித் தன்னிச்சையாகச் செயல்படும் பெண்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது? ஏன் பெண் தொடர்ந்து இரண்டாம் பாலினமாகவே நடத்தப்படுகிறாள்? சமூகத்தைப் பெண்களுக்கு எதிராகத் திருப்பிவிடுபவர்களை எப்படி எதிர்கொள்வது? உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

எல்லா மாடுகளுக்கும் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், கரும்பு, வாழைப்பழம், பனங்கிழங்கு என்று கொடுத்து, சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு காட்டுக்குப் பத்திக்கொண்டு போய் அதற்கெனவே வேலி போட்டுக் கொஞ்சமாக விளைய வைத்திருக்கும் நாத்துப் பயிரில் மேயவிடுவார்கள். கயிற்றை மாடுகளின் கழுத்தைச் சுற்றி அப்படியே தன்னிச்சையாக விட்டுவிடுவார்கள். கட்டிப்போடுவதில்லை. மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகள் அன்றைக்கென்று புளி தேய்ப்பில் தங்கமாக மின்னும். கன்றுக்குட்டிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அதுபாட்டுக்கு வாலைத் தூக்கியவாறு வேலி போட்ட காடு முழுக்க ஓடும். நினைத்த நேரம் அம்மாவின் மடியில் முட்டி, முட்டி வாயில் நுரை பொங்க பாலைக் குடித்துக்கொண்டு களியாட்டம் போடும்.

குச்சியாக நீண்டிருக்கும் வெள்ளாட்டின் கொம்புகளுக்கும், கிடை ஆடுகளுக்காகவே விட்டிருக்கும் வளைந்திருக்கும் கொம்போடு கம்பீரமாக வளையவரும் கிடாக்களின் கொம்புகளுக்கும் வண்ணமுண்டு. கிடாக்கள் பிறந்து, வளரும்போதே கொம்புகள் இப்படி கம்பீரமாக இரண்டு, மூன்று திருக்கோடு வளராது.

பிறகு மாடு, கன்றுகளுக்கு உடம்பு முழுக்க சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும், நெற்றியில் நீண்ட திலகமும் இடுவார்கள். வண்ணங்களின் அழகும் கொம்பின் நுனியில் புதுக்குப்பிகளும், கழுத்தில் மஞ்சள் நிறம் கொண்ட செவ்வந்திப் பூ மாலைகளுமாக அன்றைய பொழுதில் அவற்றைப் பார்க்கவே கண்ணுக்கு அம்சமாக மட்டுமல்ல, கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றும் தோன்றும்.

எல்லா மாடுகளுக்கும் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், கரும்பு, வாழைப்பழம், பனங்கிழங்கு என்று கொடுத்து, சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு காட்டுக்குப் பத்திக்கொண்டு போய் அதற்கெனவே வேலி போட்டுக் கொஞ்சமாக விளைய வைத்திருக்கும் நாத்துப் பயிரில் மேயவிடுவார்கள். கயிற்றை மாடுகளின் கழுத்தைச் சுற்றி அப்படியே தன்னிச்சையாக விட்டுவிடுவார்கள். கட்டிப்போடுவதில்லை. மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகள் அன்றைக்கென்று புளி தேய்ப்பில் தங்கமாக மின்னும். கன்றுக்குட்டிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அதுபாட்டுக்கு வாலைத் தூக்கியவாறு வேலி போட்ட காடு முழுக்க ஓடும். நினைத்த நேரம் அம்மாவின் மடியில் முட்டி, முட்டி வாயில் நுரை பொங்க பாலைக் குடித்துக்கொண்டு களியாட்டம் போடும்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x