Published : 30 Jun 2014 10:00 AM
Last Updated : 30 Jun 2014 10:00 AM
குழந்தையின்மை பிரச்சினை இன்று பெரும் பிரச்சினையாகி வருகிறது. குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அத்தகைய இளம் தம்பதிகளுக்கு நம்பிக்கையூட்டி நவீன மருத்துவம் மூலம் குழந்தை பேறை சாத்தியமாக்கியவர் மகப்பேறு மருத்துவரும், டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் உள்ள பிராணா கருவுறுதல் மைய இயக்குனருமான டி.ஜி.சிவரஞ்சனி. இவரது சிகிச்சையால் சிலர் இரட்டை குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆந்திராவைச் சேர்ந்த தேவி - பாலகிருஷ்ணன் தம்பதிக்கு ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கையில் ஆண் குழந்தை தவழ்கிறது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பிராணா கருவுறுதல் மையத்திற்கு வரும் முன்னர், ஏழு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பல லட்ச ரூபாய் செலவு செய்தும் பயன் கிட்டவில்லை. கடைசியாக டாக்டர் சிவரஞ்சனியிடம் வந்தார்கள். சிறப்பான சிகிச்சை மூலம் இன்று ஆண் குழந்தைக்கு அம்மா, அப்பா ஆகியிருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.
இது எப்படி சாத்தியம்? “இதில் மருத்துவ சாதனங்களின் பங்கு அதிகம்” என்கிறார் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி. “ கருமுட்டைக்குள் விந்துவை மருத்துவ உபகரணம் மூலமாகச் செலுத்தி, விந்துவுடன் கூடிய அந்த கரு முட்டையை கருப்பையின் உட்பகுதியில் செலுத்துவோம். விந்துவுடன் தயார் செய்யப்பட்ட இரண்டு, மூன்று கருமுட்டைகளை ஒரே நேரத்தில் செலுத்துவதால், சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதுண்டு. அனுசரணையான அணுகுமுறை மூலம் சிகிச்சை அளிப்பதால் குழந்தைப் பிறப்பு சாத்தியமாகிறது என்கிறார் சிவரஞ்சனி.
பிராணா மையத்தில் ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை கருத்தரிப்பு சிகிச்சைக்கான வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
“திறமையான, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மருத்துவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த மையத்தின் உள் கட்டமைப்புகளுக்கும் மருத்துவக் கருவிகளுக்கும் மிகுந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களும் இங்கு பணிபுரிகிறார்கள். சிகிச்சைக்காக நவீனக் கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்கிறார் டாக்டர் சிவரஞ்சனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT