Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM
கோடையைக் குதூகலமான காலமாக மாற்றுவதில் பெரும் பங்கு நாம் அணியும் ஆடைகளுக்கு இருக்கிறது. அப்படியென்றால் ஃபேஷன் மிளிரும் ஆடைகளைக் கோடையில் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், கோடையில் ஃபேஷன் ஆடைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
இந்த வெப்பம், வியர்வை ஒரு புறம் இருந்தாலும், அது நம்முடைய ஃபேஷன் ஆர்வத்தைப் பாதிக்கத் தேவையில்லை. நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கோடைக்கு ஏற்ற ஆடைகளைச் சரியாகத் தேர்தெடுப்பதைத்தான். எப்படிப்பட்ட ஃபேஷன் ஆடைகள் கோடைக்கு உகந்தது என்று நமக்கு ஆலோசனை சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் வெங்கடேசன்.
இந்த சம்மர் 2014 ஃபேஷனில் பிரதானமான இடம் பிரிண்ட் ஃபேப்ரிக் (Print Fabric) மற்றும் டை அண்ட் டை (Tie and Dye) பாணி ஆடைகளுக்கு இருக்கிறது. இதில் பூக்கள் (Floral Design) மற்றும் வடிவியல் டிசைன்கள் (Geometric Design) என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஃபுளோரல் டிசைன்களைக்கூட ஆஃப் டிராப், ப்ரிக் ரிப்பீட் டிசைன்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த ஆடைகளை அணிவது இப்போது ஃபேஷன் டிரெண்டுடன் பொருந்திப் போகும்.
கோடைக்குப் பொருத்தமான உடை பருத்தி சல்வார் கமீஸ்தான். சிந்தெடிக் ஆடைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
தளர்வான கால்சட்டைகளைத் தேர்ந்தெடுப்பதே கோடைக்கு ஏற்றதாக இருக்கும். குர்தாக்களுக்கு இறுக்கமான டைட்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த சம்மர் 2014 ஃபேஷன் டிரண்ட் நிறங்கள் இவைதான்: பிரைட் மற்றும் மிடில் லைட் கலர்கள். நியான் நீலம், நியான் பச்சை, நியான் பிங்க், லாவண்டர் போன்றவை பிரைட் கலர்களுக்கு உதாரணம்.
‘ஓ நெக் பாட்டிங் ஸ்லீவ் போமியா’ பாணி ஆடைகளே இந்த 2014 சம்மர் ஃபேஷன் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
வேலைக்குச் செல்பவர்கள் முக்கால் ஸ்லீவ் வெஸ்டர்ன் குர்தாக்களை அணியலாம். கேப் ஸ்லீவ் ஆடைகள் எல்லாக் கோடைக் காலத்திற்கும் ஏற்றவை.
ஷிஃபான், ஜார்ஜெட், நெட் ஃபேப்ரிக், ஜரி, ஸ்டோன் வேலைப் பாடுகள் உள்ள உடைகளைக் கோடையில் அணியக் கூடாது.
புடவைகளைப் பொருத்தவரை, ஃபைபர் புடவைகள் கோடைக்கு ஏற்றவை அல்ல. கனமான புடவைகளைத் தவிர்த்து, பருத்திப் புடவைகளை அணிவது சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT