Published : 30 Jul 2017 12:25 PM
Last Updated : 30 Jul 2017 12:25 PM
எ
னக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்குக் குழந்தையில்லை. மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் எனக்குக் கருமுட்டை வளர்ச்சி குறைவாக உள்ளதாகத் தெரிவித்தார்கள். என்ன செய்வது?
பெயர் வெளியிட விரும்பாத வாசகி
மகப்பேறு மருத்துவர்
ஏ.ஆர். சாந்தி, சென்னை.
உங்கள் உடல் எடை, தைராய்டு ஆகியவை சரியாக இருந்து இளம் வயதாக இருக்கும்பட்சத்தில் கருமுட்டையை வளர்ச்சியடையச் செய்யும் மாத்திரைகள், ஊசிகள் இவற்றின் உதவியை நாடலாம். அப்படி வளர்ச்சியடையும் கருமுட்டைகளைக் கருப்பையில் இருந்து வெளியே எடுத்து செயற்கைக் கருவூட்டல் முறையில் கருவுறச் செய்யலாம். சினைக் குழாயில் அடைப்பு இல்லையென்றால் கருமுட்டை கருப்பைக்குள் இருக்கும்போதே செயற்கைக் கருவூட்டலை மேற்கொள்ளலாம். அதனால் நீங்கள் மனம் தளராமல் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரைச் சந்தித்துத் தகுந்த ஆலோசனை பெறுங்கள்.
ஒருவேளை உடல் பருமன், தைராய்டு பாதிப்பு, கருப்பையில் நீர்கட்டிகள் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றை ஓரளவுக்குச் சரிசெய்துவிட்டுப் பிறகு கருவுறுதலுக்கு முயலலாம். பொதுவாக இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும்போது உங்கள் வயது, உடல் எடை, தைராய்டு, நாள்பட்ட நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் (உதாரணத்துக்குக் காசநோய்க்கு சிகிச்சை எடுத்துவருவது) போன்றவற்றையும் சொன்னால், மருத்துவர்கள் உங்களின் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் அளித்து உதவ முடியும்.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT