Published : 30 Jul 2017 12:26 PM
Last Updated : 30 Jul 2017 12:26 PM
மூலிகைப் பொடிகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு மகத்துவம் இருக்கும். எந்தப் பொடிக்கு
என்ன பலன் என்று பார்க்கலாம்.
வெள்ளெருக்குப் பொடி:
வெள்ளைப்படுதல், அடிவயிற்று வலியைத் தீர்க்கும்.
நன்னாரிப் பொடி:
உடல் குளிர்ச்சி பெறும். நா வறட்சிக்குச் சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்குப் பொடி:
தினமும் குளித்துவந்தால் நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்புப் பொடி:
வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்றுக் கற்றாழைப் பொடி:
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவுக்குப் பயன்படும்.
மருதாணிப் பொடி:
கை, கால்களில் பூசிவர பித்தம், கபம் மட்டுப்படும்.
கருவேலம்பட்டைப் பொடி:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிப்பல், பல்வலி போன்றவற்றைத் தீர்க்கும்.
- தேவி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT