Last Updated : 09 Feb, 2014 03:56 PM

 

Published : 09 Feb 2014 03:56 PM
Last Updated : 09 Feb 2014 03:56 PM

மகிழ்ச்சியைப் படம் பிடிப்பதும்
 மகிழ்ச்சியே

தொழில்நுட்ப வளர்ச்சி, இல்லத்தரசிகளையும் புகைப்படக் கலைஞர்களாக மாற்றியிருக்கிறது. குழந்தைகள்கூட செல்போனில் அருமையாகப் படம் எடுக்கும்போது நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வி, நம் வாசகிகள் சிலரைப் புகைப்படங்கள் எடுக்கத் தூண்டியிருக்கிறது.


சென்னையைச் சேர்ந்த ஓய்வு
பெற்ற தலைமை ஆசிரியையான பத்மா சுவாமிநாதன், தான் கேமரா பிடிக்கக் காரணம் சமூக வலைத்தளம் என்கிறார்.
“எனக்குக் கைவினைக் கலைகள் மீது ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. ஃபேஷன் நகைகள் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பேன். கடந்த ஆண்டுதான் முகநூலில் இணைந்தேன். அதில் என் நண்பர் ஒருவர் தான் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார்.

அவற்றைப் பார்க்கும்போது எனக்கும் புகைப்பட ஆர்வம் துளிர்விட்டது. உடனே ஒரு கேமராவை வாங்கி, புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். இணையதளம் மூலமாக புகைப்படம் எடுக்கும் நுட்பங்களையும் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லும் பத்மா, பார்க்கிற அனைத்தையும் புகைப்படமாக்கிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.


மணச்சநல்லூரைச் சேர்ந்த மோகனா நாகராஜன், தன் கல்லூரிப் படிப்புதான் புகைப்படங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்கிறார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமராவும் கையுமாகக் களம் இறங்கிவிடுவாராம்.
“நான் வெப் டிசைனிங் படிக்கும்போது போட்டோ எடிட்டிங் செய்வதற்காகத்தான் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.

படிப்புக்காகச் செய்தது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாகவும் மாறிவிட்டது. அதனால் தனியாக கேமரா வாங்கி புகைப்படங்கள் எடுத்து வருகிறேன்” என்கிறார் மோகனா.
வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பதிவு செய்வதில் புகைப்படங்களுக்கும் பங்குண்டு. அதைத்தான் இவர்களின் புகைப்படங்களும் நிரூபிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x