Published : 12 Mar 2017 01:38 PM
Last Updated : 12 Mar 2017 01:38 PM

குறிப்புகள் பலவிதம்: வெயில் காலம் வந்தாச்சு !

# எலுமிச்சை சாறு, பெரிய நெல்லிக்காய், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதோடு முள்ளங்கி, வெள்ளரி, புடலங்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

# தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைப்பது உடல் சூட்டைத் தணிக்கும்

# உச்சி வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செல்ல நேர்ந்தாலும் வெளிர் நிற குடையைப் பிடித்துக்கொண்டு செல்லலாம்.

# வேர்க்குரு உள்ள இடத்தில் நுங்கு நீரைத் தடவினால் கட்டிகள் மறைந்துவிடும்.

# வெயிலின் உக்கிரத்தால் பலருக்கும் சோர்வு ஏற்படலாம். குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் கூடுதல் சோர்வுடன் இருப்பார்கள். எலுமிச்சை சாறு கலந்த நீரையோ, அடிக்கடி தண்ணீரையோ குடிப்பதன் மூலம் சோர்வைக் குறைக்கலாம்.

# வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு தண்ணீர் குடிப்பதோ, குளிப்பதோ கூடாது. இது உடல் உபாதைகளை உருவாக்கலாம். சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு குடிக்கவோ குளிக்கவோ செய்யலாம்.

# வேர்க்குரு உள்ளிட்ட தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வெயில் காலத்தில் வரும். இவர்கள் சோப் பயன்படுத்துவதைத் தவிர்த்து கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை அரைத்துத் தேய்த்துக் குளிக்கலாம்.

# வெயிலை எதிர் கொள்வதற்காக கிரீம், பவுடர் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் அவற்றில் உள்ள வேதிப் பொருட்கள் தோல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடும். அதற்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் சந்தனம் வாங்கி பயன்படுத்துவதே நல்லது.

- தமிழ்ச்செல்வி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x