Published : 12 Nov 2013 04:31 PM
Last Updated : 12 Nov 2013 04:31 PM
நண்பர்களுடன் சேர்ந்து வெளியே கிளம்பினால் எளிமையான காட்டன் சல்வார் கமீஸ் சிறந்த தேர்வு.
அதுவும் எளிமையான ஆடையாக இருப்பது சாலச் சிறந்தது. ரிங்கிள் ஃப்ரீ எனப்படும் சுருக்கங்கள் அற்ற ஆடைகளை அணிவது நல்லது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடை ஃபேஷனபிளாக இருக்கிறதா என்பதைவிட, உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
சிலர் தங்களுக்குக் கொஞ்சமும் பொருந்தாத, ஆனால் டிரெண்டியான ஆடையை அணிந்திருப்பார்கள். அது அவர்களின் தோற்ற மதிப்பீட்டைக் குறைக்குமே தவிர வேறெந்த பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தராது.
இப்போதுதான் கடைக்குக் கடை டிரையல் அறை இருக்கிறதே. அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடையை அணிந்துகொண்டு, பலவிதங்களில் கண்ணாடி முன்னால் நின்று சரிபார்க்கலாம். குறிப்பாக பல கோணங்களில் உட்கார்ந்து பார்த்து வாங்குவது நல்லது.
காரணம், பெரும்பாலான நேரம் கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்ய வேண்டியவர்கள், இப்படி சரிபார்த்து வாங்குவதுதான் நல்லது.
ஆபீஸில் உடன் பணிபுரிகிறவர்களுடன் கெட் டு கெதர் என்றால் அது அலுவலக சம்பந்தமான மீட்டிங்காகவோ, உற்சாக சந்திப்பாகவோ இருக்கலாம். ஸ்மார்ட் ஜீன்ஸும் அதற்கேற்ற டிஷர்ட்டும் அணியலாம். அதற்கு மேட்சிங்கான ஓவர்கோட் அல்லது ஸ்கார்ஃபை கையில் எடுத்துச் சென்று, ஈவ்னிங் பார்ட்டிக்கு செல்லும் முன் அணிந்து கொள்ளலாம். நீங்கள் சல்வார் செட் அணிகிறவராக இருந்தால் பார்ட்டிக்குக் கிளம்பும் முன் குர்தாவுக்கு மாறலாம்.
புடவை அணிந்து சென்றால் அதற்கேற்ற செயின், கம்மல் மற்றும் வளையலை மாற்றிக் கொண்டு பார்ட்டிக்குப் புறப்படுங்கள்.
எந்த உடை அணிந்திருந்தாலும் கையில் மேக்-அப் கிட் வைத்திருப்பது நல்லது. பார்ட்டிக்குக் கிளம்பும்போது முகம் கழுவி, டச் அப் செய்து கொண்டால், நீங்கள்தான் அந்தப் பார்ட்டியின் சிறப்பு விருந்தினர் போல இருப்பீர்கள்.
இயல்பான கேஷுவல் கெட் டுகெதர் அல்லது உடன் பணிபுரிகிறவரின் பதவி உயர்வைக் கொண்டாடும் கெட் டு கெதருக்குச் செல்வதாக இருந்தால், ஃபார்மல் அல்லது கேஷுவல் இரண்டில் எதை அணிவது என்ற குழப்பம் இருக்கலாம்.
ஒரு சின்ன உத்தியைப் பயன்படுத்தி இந்த மாதிரி சூழ்நிலையை மிக எளிதாக ஹேண்டில் செய்யலாம். ஃபார்மலாகவும் இல்லாமல், படு கேஷுவலாகவும் இல்லாத ஒரு உடையை அணிந்து சென்றால் போதும். இந்த வகை டிரஸ்ஸிங்கை செமி ஃபார்மல் அல்லது பிசினஸ் கேஷுவல் என்று சொல்வார்கள்.
உங்கள் இருப்பைக் காட்டுவதற்காக பவர்ஃபுல்லாக டிரஸ் அணிந்து செல்வதைவிட சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செல்வது மிக முக்கியம்.
நீங்கள் வெஸ்டர்ன் ஸ்டைலில் டிரஸ் அணிகிறவராக இருந்தால் ஃப்ளோயி ஸ்கர்ட்டும் அதற்கு மேட்ச்சிங்கான டாப்ஸும் அணியலாம்.
உயரம் குறைவானவர்களைக் கூட உயரமாகக் காட்டக்கூடிய மேஜிக் இந்த காம்பினேஷனுக்கு உண்டு.
தற்போது டிரென்டியாக இருக்கும் பலூன் டிரஸ்ஸையும் அணியலாம். பென்சில் ஸ்கர்ட்டுகள் சமீபகாலமாக ஃபார்மல் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டதால் அதைத் தவிர்க்கலாம்.
நீங்கள் அணிந்து செல்கிற ஆடை உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.
எந்த உடை அணிந்திருந்தாலும் கையில் மேக்கப் கிட் வைத்திருப்பது நல்லது. பார்ட்டிக்குக் கிளம்பும்போது முகம் கழுவி, டச் அப் செய்து கொண்டால், நீங்கள்தான் அந்தப் பார்ட்டியின் சிறப்பு விருந்தினர் போல இருப்பீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT