Published : 11 Jun 2017 01:48 PM
Last Updated : 11 Jun 2017 01:48 PM
* நெல்லிக்காயை விதை நீக்கி, வடகத்துக்கான மாவில் சேர்த்து அரைத்தால் வடகம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
* வடகத்துக்கான மாவில் சிறிது சோம்பு கலந்து காயவைத்தால் பொரித்துச் சாப்பிடும்போது சுவையாய் இருக்கும்.
* வடகம் போடும் முன் அதில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் வற்றலின் ருசியும் மணமும் கூடும்.
* வடகத்துக்கான மாவில் பால் சேர்த்துக் கிளறினால் வடகம் வெள்ளை வெளேரென இருக்கும்.
* ஜவ்வரிசி வடகத்துக்குப் பச்சை மிளகாயுடன் ஐந்து பல் பூண்டை அரைத்துச் சேர்த்தால் வடகம் பொறிக்கும்போது வாசனையாக இருக்கும். வாயுத் தொல்லை அண்டாது.
* வடகம் போடும்போது மாவில் உப்பைக் குறைவாகச் சேர்ப்பது நல்லது. அப்போதுதான் எண்ணெயில் பொரிந்ததும் அளவு சரியாக இருக்கும்.
* பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் சாற்றை வடகத்துக்கான மாவில் சேர்த்தால் ருசியாக இருப்பதோடு பலவித வண்ணங்களில் கண்ணைக் கவரும்.
எது நல்லது?
* பன்னீர் திராட்சை எந்த அளவுக்குக் கறுப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சுவையாக இருக்கும்.
* இலந்தைப் பழத்தில் பூச்சி இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.
* நீள வாக்கில் வாட்டசாட்டமாய் இருக்கும் சப்போட்டா பழத்தைவிட சின்னச் சின்னதாய் உருண்டையாக இருக்கும் சப்போட்டாதான் தரமானது. சுவையும் கூடுதலாக இருக்கும்.
* வெளிப்புறத்தில் கரடு முரடாக, பெரிதாக இருந்தால் அவை ரசாயன உரத்தால் வளர்ந்த கொய்யாப் பழங்களாக இருக்கும். சிறியதோ, பெரியதோ மேல்புறம் பள்ளம் மேடு இன்றி சமமாக இருந்தால் கொய்யா சுவையாக இருக்கும்.
* சாத்துக்குடி சாறு எடுக்க வேண்டும் என்றால் பச்சை நிறத்தில் உள்ளதை வாங்க வேண்டும். உரித்துச் சாப்பிட வேண்டும் என்றால் ஓரளவு மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும் சாத்துக்குடியை வாங்கலாம்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT