Published : 19 Mar 2017 11:00 AM
Last Updated : 19 Mar 2017 11:00 AM

குறிப்புகள் பலவிதம்: வாடாத கறிவேப்பிலை!

> கோதுமை மாவில் சிறிது இளநீரைச் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.

> வெந்தயக் கீரையைச் சமைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்தால் கசப்பு மட்டுப்படும்.

> முருங்கைக்கீரையில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளதால் பித்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கண் நோய் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து.

> ஹாட்பேக்கில் ஈரம் இல்லாமல் கறிவேப்பிலையை உருவிப் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்போது பறித்தது போல இருக்கும்.

- அ. பவானி, வயலூர்.

> வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளித்துவந்தால் உடல் சூடு நீங்கி, குளிர்ச்சி பெறும்.

> நல்லெண்ணெயில் காம்புடன் கூடிய ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, இரண்டு டீஸ்பூன் ஓமம் சேர்த்து மிதமாகச் சூடு செய்து உடலுக்குத் தேய்த்துக் குளிப்பது நல்லது.

> எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ஷாம்பூ போட்டுக் குளிப்பதைவிட சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் எண்ணெய்க் குளியலுக்கான பலன் கிடைக்கும்.

> நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிக சூடான நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம் பிடிக்கக்கூடும்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x