Published : 07 May 2017 10:53 AM
Last Updated : 07 May 2017 10:53 AM
நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலர் கண்காட்சியைப் பார்க்க ஊட்டிக்குப் போயிருந்தோம். லாஸ் அருவி, தாவரவியல் பூங்கா, உதகை ஏரி, படகு இல்லம், லாம்ஸ் ராக்ஸ், சிம்ஸ் பூங்கா, ரோஸ் கார்டன், கண்ணாடி மாளிகை ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு கேத்தி பள்ளத்தாக்கைப் பார்க்கச் சென்றோம். இருபுறமும் கடைகள் சூழ்ந்து இருக்க அதையே பார்த்துக் கொண்டும், பொருட்களை வாங்கிக்கொண்டும் சென்றோம். மேலே சென்றபோது சுற்றிலும் ஆளுயரக் கம்பிகள் போடப்பட்டிருந்தன. அந்தப் பக்கம் கிடுகிடு பள்ளத்தாக்கு இருப்பதையும் பனி மூடுவதும் பிறகு மறைந்து வானம் பளிச்சென்று மாறுவதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஒரு குரங்கு பாய்ந்து வந்து கையில் இருந்த பாக்கெட்டைப் பறித்துச் சென்று பாதாளத்தில் வீசிவிட்டுச் சென்றது. இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது திடீரென நடந்த அந்தச் சம்பவத்தால் ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும் பிறகு இயல்பு நிலைக்கு வந்தேன். அதன் பிறகு எப்பொழுது ஊட்டி சென்றாலும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். சுற்றுலாவுக்கு எங்கே சென்றாலும் சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT