Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM
பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.
1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக்காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.
1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத்தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.
1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.
1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வேண்டுமென போராடினர்.
1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கௌரவம் குலைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினர்.
1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சமச் உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.
1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய ‘இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வாறெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.
1970இல் பெண் அமைப்புகளால் தீர்மானிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது ‘உலக மகளிர் தினம்'. ஆனால் இன்றும் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
கிரிஜா மணாளன், திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT