Published : 11 Jun 2017 02:54 PM
Last Updated : 11 Jun 2017 02:54 PM

ஒளிச்சித்திரம்: அரங்குக்கு வெளியே ஓர் அழகு உலகில்!

பி.வி. சிந்து. ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வாங்கும்வரை நாடறியாத பெயராக இருந்த சிந்து, இன்றைக்கு உலகம் அறிந்த பாட்மின்டன் நட்சத்திரமாகத் திகழ்கிறார். ஒலிம்பிக் வெள்ளிக்குப் பிறகு சீன ஓபன், இந்திய ஓபன் என அடுத்தடுத்துப் பல வெற்றிகளைக் குவித்துள்ளார். உலக மகளிர் பாட்மின்டன் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சிந்து, விளம்பரங்களில் நடிப்பதற்கு அதிகம் தேடப்படும் முகமாக மாறிவிட்டார்.

களத்தில் அதிவேகமாகப் பறந்து பறந்து இறகுப் பந்துகளை எதிராளிக்கு விரட்டும் சிந்து, இங்கே பாந்தமான டிசைனர் உடைகளில் ஓர் இளவரசியைப் போலத் தோன்றுகிறார்.

(ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பாட்மின்டன் பயிற்சி மையத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x