Published : 28 May 2017 12:29 PM
Last Updated : 28 May 2017 12:29 PM

குறிப்புகள் பலவிதம்: தும்மலை நிறுத்தும் கொத்தமல்லி

# மோரில் ஊறவைத்த வாழைப்பூவை நெய் விட்டு வதக்கித் துவையல் அரைத்தால் சுவையாக இருக்கும்.

# இரவில் சீரகம், மிளகுத் தூள், கற்கண்டு கலந்து ஒரு டம்ளர் பால் குடித்தல் உடல் பருமன் குறைவதோடு தூக்கமும் நன்றாக வரும்.

# வாழைத்தண்டை நறுக்கி மோரில் ஊற வைத்துச் சமைத்தால் சுவையும் சத்தும் கூடும்.

# கொத்தமல்லி இலையை முகர்ந்தால் காலையில் வரும் தொடர் தும்மல் நின்றுவிடும்.

- நா.செண்பகா, பாளையங்கோட்டை.



# தேங்காயைத் துண்டுகளாக்கி வெயிலில் லேசாகக் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

# உருளைக் கிழங்கைச் சீவி உப்புத் தண்ணீரில் போட்டு ஊறவைத்து, உலர்த்தி வறுத்தால் சிப்ஸ் அருமையாக இருக்கும்.

# நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தின் உட்பகுதியில் சிறிது வெண்ணெயைத் தடவிப் பிறகு நெய் காய்ச்சினால் மண்டி பாத்திரத்தில் படியாது. பாத்திரத்தை எளிதில் கழுவ முடியும்.

# காகிதத்தை நீரில் நனைத்து அதில் கீரையைச் சுற்றி வைத்தால் வாடிப்போகாமல் பசுமையாக இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x