Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன், தாயின் மகிழ்ச்சியோடு நேரடித் தொடர்பில் உள்ளது. அதனால் அம்மா எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் வளத்தோடு இருக்கும்.
மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவு களையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச் சத்து. அதனுடைய முக்கியத் துவத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.
கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக் கும். அதனால் நாமாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மை தரும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
- உமாராணி, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT