Published : 18 Jun 2017 12:46 PM
Last Updated : 18 Jun 2017 12:46 PM

தூக்கத்தை வரவழைக்கும் ஆரஞ்சு தோல்

# ஆரஞ்சுத் தோலைச் சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை வத்தல் குழம்பு தாளித்து, கொதிக்கும் போது அதனுடன் 4,5 துண்டுகள் போட்டுக் கொதிக்கவிட்டால் குழம்பின் மணம் ஈர்க்கும்.

# ஆரஞ்சுத் தோல்களின் மேல் 4,5 கிராம்புகளைக் குத்தி சமையலறை அல்லது பாத்ரூமில் இரண்டு நாட்கள் வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.

# ஆரஞ்சுப் பழத் தோலை பொடியாக நறுக்கி நிழலில் காய வைத்து டீத் தூள் பாட்டிலில் போட்டு வைத்தால் டீ நறுமணத்துடன் இருக்கும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

# ஆரஞ்சுத் தோலை நன்றாக காயவைத்து மிக்ஸியில் பொடி செய்து அதனுடன் பால் அல்லது தயிர், தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.

# குளிக்கும் போது கடலை மாவுடன், ஆரஞ்சு தோல் பொடியை கலந்து குளித்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

சீயக்காய் அரைக்கும் போது வெந்தயம், செம்பருத்தியுடன் ஆரஞ்சுத் தோல்களையும் காய வைத்து அரைத்தால் கூந்தல் நறுமணமாக இருக்கும்.

# கொதிக்கும் நீரில் ஆரஞ்சுப் பழ தோல் பொடியைக் கலந்து ஆவி பிடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

வள்ளிமயில், மதுரை.

# கடையில் வாங்கும் காய்கறிகளில் படிந்திருக்கும் பூச்சி மருந்துகளை நீக்க எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு கலந்து நீரில் கழுவ வேண்டும்.

# பச்சை வேப்பிலைக்கிடையே முட்டைகளை வைத்திருந்தால் பல நாள் கெடாமல் இருக்கும்.

# முகத்தில் எண்ணெய் வடிவதைத் தடுக்க எலுமிச்சை பழச் சாற்றை முகத்தில் பூசி வந்தால் எண்ணெய் வடிவது குறையும்.

# நெஞ்சு சளி வெளியேற மிளகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

# ஆஸ்துமா நோய் குணமாகத் தூதுவளை பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வேண்டும்.

பிரேமா தியாகராசன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x