Published : 30 Apr 2017 03:56 PM
Last Updated : 30 Apr 2017 03:56 PM
# கடுகை ஊறவைத்து அரைத்து தினமும் முட்டியில் தடவில்வந்தால் முட்டியில் உள்ள கருமை நிறம் மாறிவிடும்.
# வெயில் காலத்தில் கடலை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவிப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும்.
# கடுக்காய்ப் பொடியைப் பல் பொடியுடன் கலந்து பல் தேய்த்தால் பல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.
- செண்பகவள்ளி, பாளையங்கோட்டை.
# வெண்டைக்காயைச் சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு தெளித்தால் சமைக்கும்போது ஒட்டிக்கொள்ளாது.
# காபி, டீ பாத்திரங்களில் உள்ள கறை மறைய ஈரத்துணியில் சிறிது சோடா மாவை தடவி பாத்திரத்தை தேய்த்துப் பிறகு வழக்கம் போல் கழுவலாம்.
# மிக்ஸியில் தயிர் கடையும்போது சிறிது நேரம் ஓடிய பின் ஐந்து நிமிடங்கள் நிறுத்திவிட்டுப் பிறகு ஓடவிட்டால் வெண்ணைய் நன்கு திரண்டுவரும்.
- இந்திரா முருகேசன், பெருஞ்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT