Published : 23 Apr 2017 11:56 AM
Last Updated : 23 Apr 2017 11:56 AM

குறிப்புகள் பலவிதம்: நீர்க்கடுப்பை நீக்கும் கீரைகள்

# வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியைக் குறைக்க மிதமான சூட்டில் நீரைச் சிறிது சிறிதாகக் குடித்தால் வலி குறையும்.

# கடைகளில் வாங்கும் காய்கறிகளை எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு கலந்த நீரில் கழுவினால் பூச்சி மருந்துகளின் தாக்கம் ஓரளவு குறையும்.

# காய்கறி, கீரை, நார்ச்சத்து மிகுந்த உணவைச் சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் மட்டுப்படும்.

# கீரையைச் சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த வெந்நீரில் நனைத்து எடுத்துச் சமைத்தால் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கமும் குறையும்.

# பச்சை வேப்பிலைக்கு நடுவே முட்டைகளை வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

# எலுமிச்சைச் சாற்றை முகத்தில் பூசிவந்தால் எண்ணெய் வடிவது குறையும்.

# ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

# புதினா சாற்றுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, மரு, முகப்பரு ஆகியவை குறையும்.

# மஞ்சள் தூள், புதினா இலை ஆகியவற்றைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் இருமல், மண்டையில் உள்ள நீர், சளி, மூக்கடைப்பு ஆகியவை நீங்கும்.

# கோதுமையை வறுத்துப் பொடித்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட முதுகு வலி, மூட்டு வலி குறையும்.

# நார்ச்சத்து மிகுந்த வேர்க்கடலையைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்.

# மிளகைப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், நெஞ்சு சளி குறையும்.

# நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றுக்குப் பசலைக்கீரை நல்லது. அதேபோல் முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புதினா ஆகியவையும் நீர்க்கடுப்பை நீக்கும்.

- பிரேமா தியாகராசன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x