Published : 19 Jun 2016 02:30 PM
Last Updated : 19 Jun 2016 02:30 PM

குறிப்புகள் பலவிதம் : எந்த ரசமும் ருசிக்க!

சத்தில் பருப்புத் தண்ணீர் விட்டு நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும். கொதிக்கவிடக் கூடாது. நெய்யில் கடுகு தாளிக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகுப் பொடியைச் சேர்த்தால் எந்த ரசமும் மணக்கும்.

ற்றல் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெயில் தாளித்து அதிலேயே தேவையான சாம்பார் பொடி போட்டு வதக்கிப் பிறகு புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் குழம்பு வைத்தால் தனி வாசனையுடன் இருக்கும். சுவையும் கூடும்.

வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது, வேகவைத்த வாழைக்காயை உதிர்த்துச் செய்யாமல் கேரட் துருவியில் துருவிச் சேர்த்தால் கண்ணுக்கும் விருந்து, நாவுக்கும் சுவை! இத்துடன் கேரட்டையும் சீவிப் போட்டு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து சேர்த்தால் மூவர்ணத்தில் துலங்கும் பொடிமாஸ், உங்களுக்குப் பாராட்டை வாங்கித்தரும்.

வெல்லக் கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவது பலருக்கும் கடினமாகத் தோன்றும். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மாவை அப்படியே தூவிச் செய்யும்போது அது கட்டி தட்டிவிட்டால் கொழுக்கட்டை சொப்பு செய்ய வராது. அரிசிமாவைத் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக்கொண்டு, வாணலியில் ஒரு கரண்டி நீரில் சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் பால், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொதித்ததும், கரைத்த அரிசி மாவை அதில் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி, ஒரு பாத்திரத்தை மேலே கவிழ்த்து மூடிவையுங்கள். அரை மணி நேரம் கழித்து எண்ணெயைக் கையில் தொட்டுக்கொண்டு நன்றாகப் பிசைந்து கொழுக்கட்டை சொப்பு செய்தால் விள்ளாமல், விரியாமல் அருமையாக வரும்.

மைசூர்பாகு செய்யும்போது கடலை மாவைப் பாகில் அப்படியே சேர்த்தால் கட்டி தட்ட வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக சிறிதளவு நெய்யை நன்கு உருக்கி அதில் கடலை மாவைக் கலந்து சேர்த்தால் எளிதில் சேர்ந்துவிடும். நெய்யும் டால்டாவும் சரியளவு கலந்து மைசூர்பாகு செய்தால் சுவையாக இருக்கும்.

ருப்பு உசிலிக்கு அரைக்கும் போது, பதம் சரியாக வரவில்லையென்றால் கெட்டியாகிவிடும். ஒரு கப் துவரம் பருப்புடன் கால் கப் கடலைப் பருப்பு சேர்த்து ஊறவையுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவையுங்கள். ஆறியதும் மிக்ஸியில் விப்பர் மோடில் இரு முறை சுற்றினால் பூவாக உதிர்ந்துவிடும். இதில் உசிலி செய்து பாருங்கள், சமைத்த அடுத்த நொடி காலியாகிவிடும்!

- ராதாபாலு, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x