Published : 02 Mar 2025 01:20 PM
Last Updated : 02 Mar 2025 01:20 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சியில் நவத்தாவு கிராமத்தில் மண்பாண்டத் தொழில்குழு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒரே தொழில் செய்யும் நபர்களை ஒருங்கிணைத்து அவர்களின் தொழிலைப் புதிய முறையில் உற்பத்தி செய்து, அதிக விலைக்கு விற்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 19 நபர்களைக் கொண்டு சூரக்குளம் மண்பாண்டத் தொழில் குழு உருவாக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் துவக்க நிதியாக ரூ.75,000 பெற்று அதன் மூலம் மண் அரைக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.
சூரக்குளம் மண்பாண்டத் தொழில் குழுவிற்கு நவீன முறையில் பொருள்கள் தயாரிக்க சமுதாயத் திறன் பள்ளி ஏற்படுத்தி ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்பாண்டத் தொழில் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். மண்பாண்டத் தொழில் குழுவிற்கு (MGP) இணைமானியத் திட்டத்தின் மூலம் 30% மானியத்துடன் கடன் உதவி ரூ.3,00,000 வங்கியின் மூலம் பெற்று பயனடைந்துள்ளனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புத்தாக்கத் திட்டத்தின் (Innovation project) மூலம் மண்பாண்டத் தொழில் குழுவிற்கு புதிய நவீன முறையில் மண்பாண்டப் பொருள்களைச் சுடுவதற்குப் பழைய முறைகளை மாற்றி புதிய நவீன முறையில் டைடு நிறுவனத்தின் மூலம் ரூ.9.97,100/- மதிப்புள்ள புதிய நவீன சூளை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன முறை சூளையால் எரிபொருள் செலவினம் 40% வரை குறைந்துள்ளது. மழை, வெயில் காலங்களில் பாதுகாக்கும் வகையில் சேமிப்பு அறையுடன் கூடிய 1,200 சதுர அடியில் ரூ.9.30,000/- மதிப்பீட்டில் மண்பாண்டத் தொழில் குழுவிற்கு கொட்டகை அமைக்கப்பட்டது. சூரக்குளம் மண்பாண்டம் தொழில் உறுப்பினர்கள் ஒருமுறை சூளை எரிப்பதன் மூலம் ரூ.30,000/- வரை ஈட்டுகிறோம். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு நன்றி.
உளுந்து சாகுபடியால் கிடைத்த உயர்வு! - திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், இடும்பாவனம் கிராமத்தில் வசிக்கும் மதியழகன் என்பவரின் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சமுதாயப் பண்ணை பள்ளியில் உளுந்து உற்பத்தி குறித்துப் பேசப்பட்டு அதன்படி ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் உளுந்து உற்பத்தியாளர்களைக் கொண்டு 2019ஆம் ஆண்டு உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டது. இந்த உற்பத்தியாளர் குழுவிற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கரோனா சிறப்பு நிதியாக ரூ. 1,50,000இல் புதிதாக டிப்பர் ஒன்று கொள்முதல் செய்து, அந்தக் குழுவில் உள்ள விவசாயிகள் அவர்களுடைய விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப குறைந்த வாடகையில் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.
மாவட்டச் செயல் அலுவலர், செயல் அலுவலர்கள் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரப் பணியாளர்கள் மூலம் சமுதாயப் பண்ணைப் பள்ளி அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கையாக மண் பரிசோதனை செய்தல், நீர் பரிசோதனை செய்தல், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், சொட்டு நீர் பாசனம், விதைத் தேர்வு, விதை நேர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டல் குறித்து நான்கு மாதங்களில் 14 நாட்கள் 30 விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி பண்ணைப் பள்ளி உருவாக்கப்பட்டு வம்பன் 6 என்கிற உளுந்து ரகம் புதுக்கோட்டை வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வாங்கப்பட்டு வேளாண் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் விதைக்கப்பட்டது.
மேலும், முறையான வேளாண் சாகுபடி நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் உளுந்து அறுவடை செய்யப்பட்டது. இந்த அறுவடையின் மூலம் 100 குழி மாதிரி திடலில் இருந்து 1.5 குவிண்டால் உளுந்து அறுவடை செய்யப்பட்டது. இக்கிராமத்தில் 10 ஆண்டுகளாக உளுந்து விவசாயம் செய்யாத நிலையில், நவீன உளுந்து சாகுபடி சாதனை செய்ய உதவிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT