Last Updated : 05 May, 2024 09:09 AM

 

Published : 05 May 2024 09:09 AM
Last Updated : 05 May 2024 09:09 AM

ப்ரீமியம்
பிரசவ அறையின் முதல் கேள்வி

அரசு மருத்துவமனையில் சகோதரியின் பிரசவக் காலத்தில் கூடவே இருந்து பராமரித்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. பிரசவ அறைக்கு வெளியே தகவலைக் கேட்கக் கூடி நிற்கும் மக்களின் முகங்களும் அவற்றில் இருக்கும் எதிர்பார்ப்புகளும் வர்ணிக்க முடியாதவை. பிரசவ அறைக்குள்ளிருந்து வரும் தகவல்களில் முக்கியத் தகவல் பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

‘பொம்புள பிள்ள பிறந்திருக்கும்மா…’ என்கிற தகவலைக் கேட்டுச் சுவரில் சாய்ந்து அழுதாள் அந்தக் குழந்தையைப் பெற்றவளின் அம்மா. பெண் பிள்ளை பிறந்திருக்கிறாள் என்கிற தகவலைக் கேட்டு நொறுங்கிப் போனவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆறுதலற்றுத் தவித்துப் போனவர்களாக, வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். பெண் குழந்தைப் பிறப்புக்குப் பின் இருக்கும் போராட்டங்களை ஒப்பாரியாகப் பாடிய அம்மச்சிகளின் கண்ணீரைக் கண்டிருக்கிறேன். ஏன் இன்னமும் இந்நிலை மாறவில்லை?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x