Published : 24 Mar 2024 07:32 AM
Last Updated : 24 Mar 2024 07:32 AM
இருபது நிமிடங்களில் சாப்பிடுவதற்கு, மணிக்கணக்கில் சமையலறையில் நிற்க வேண்டும். அதுவும் மூன்று வேளைகளுக்கும் எனும்போது மலைப்பாக இருக்கும். அடுக்களையில் கவனமாகக் கையாள வேண்டியவை என அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளையும் சொல்லலாம். எப்போதும் சீராக எரிய வேண்டிய கேஸ் அடுப்பு, சில நேரம் ‘நாப்’பைத் திருகிக் குறைத்தால் மொத்தமாக அணைந்து அதிர்ச்சி கொடுக்கும். எரிவாயு தீர்ந்ததும் அதிகக் கவனத்துடன் மாற்ற வேண்டிய சிலிண்டர், நமது உடல் திறனைச் சோதிப்பதோடு நினைவாற்றலையும் சரிபார்க்கும். மாற்றி வெகு நாளான குக்கரின் கேஸ்கட் அல்லது வேறு குறைபாடு, அடுப்பின் சூட்டில் மூடியின் மேலே அடைப்பை உடைத்து வெளியேறி கொதிக்கக் கொதிக்க அறையின் மேற்கூரையை அபிஷேகம் செய்யாத சமையலறையே இல்லை எனலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT