Published : 03 Mar 2024 07:19 AM
Last Updated : 03 Mar 2024 07:19 AM
மார்ச் மாதம் முழுவதும் பெண்களின் வரலாற்றை நினைவுகூரும் மாதமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சாதிய, வர்க்க, பாலினப் பாகுபாடுகள் மலிந்த நம் சமூகத்தில் எழுதப்பட்ட பெண்களின் வரலாறு, இந்தப் பாகுபாடுகளைக் கடந்தது அல்ல. யாரால், எதற்காக வரலாறு எழுதப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது என்பதும் விவாதத்துக்குரியது.
சமூகத்துக்குப் பங்களித்த பெண்களின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல பெண்களின் வரலாறு. சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெண்களின் நிலையைப் பேசுவதும் வரலாறுதான். காரணம், நாம் வெற்றிக் கதைகளாகக் கொண்டாடும் பெரும்பாலான நிகழ்வுகள் பெண்களை வதைத்து உருவாக்கப்பட்டவையே. பாலுறவைத் தொழிலாக, மாபெரும் வர்த்தகமாக உலக நாடுகள் மாற்றிய கொடூரமும் பெண்ணுடலைப் பண்டமாக்கி நிகழ்த்தப்பட்டதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT