Last Updated : 04 Feb, 2024 07:36 AM

1  

Published : 04 Feb 2024 07:36 AM
Last Updated : 04 Feb 2024 07:36 AM

ப்ரீமியம்
பள்ளிக்குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையா?

சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மூன்று சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பில் நாம் எந்த அளவுக்கு அசட்டையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுமியர் மூவரும் 7 முதல் 10 வயதுக்கு உள்பட்டவர்கள். சாக்லெட் தருவதாக ஆசை காட்டப்பட்டு அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் குற்றச் செயலுக்கு விவரம் அறியாத எட்டு வயதுச் சிறுவன் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

குற்றச் சம்பவம் பள்ளிக்கு அருகில் இருக்கும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளியிலிருந்துதான் அந்தச் சிறுமியர் குற்றவாளியால் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். பள்ளி தம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கிருந்து ஒரு குழந்தையை மிக எளிதாகத் தாங்கள் நினைக்கிற இடத்துக்குக் குற்றவாளிகளால் அழைத்துச் சென்றுவிட முடியும் என்றால், குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது? ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்தாலும் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியது பள்ளியின் பொறுப்புதானே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x