Last Updated : 21 Jan, 2024 08:20 PM

 

Published : 21 Jan 2024 08:20 PM
Last Updated : 21 Jan 2024 08:20 PM

ப்ரீமியம்
பெண்கள் 360: மூவரில் ஒருவரைக் காயப்படுத்துகிறோம்

உலக அளவில் மூவரில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தன் இணையரால் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். அல்லது இணையர் அல்லாத ஆணால் பாலியல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். பாலியல் வல்லுறவு தவிர்த்த புள்ளி விவரம் இது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இது எளிதாகப் புறக்கணித்துவிடக்கூடிய செய்தியல்ல. காரணம், நம் இந்தியக் குடும்ப அமைப்பில் பெரும்பாலான குடும்ப வன்முறைகள் இயல்பானவை என நம்ப வைக்கப்பட்டுள்ளன. அதுவே பெண்கள் மீதான வன்முறை தலைமுறைகள் தாண்டியும் தொடரக் காரணமாக இருக்கிறது.

குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், மனச்சோர்வு, பதற்றம், திட்டமிடாத அல்லது விருப்பம் இல்லாத கர்ப்பம், பால்வினை நோய்கள், எச்.ஐ.வி. தொற்று போன்றவற்றுக்கு எளிதில் ஆட்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. அவர்கள் மீதான வன்முறை முடிவுக்கு வந்த பிறகும்கூட அவர்களால் அதன் பாதிப்பிலிருந்து மீள முடிவதில்லை என்பது வன்முறையின் கொடும் தாக்கத்தைக் காட்டுகிறது.
162 நாடுகளில் குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களும் 147 நாடுகளில் பணியிடப் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இருந்தபோதும் பெண்கள் மீதான வன்முறை குறையவில்லை என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. 10 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே குடும்ப வன்முறை குறித்துக் காவல் நிலையங்களில் புகார் செய்கிறார்களாம். சட்டங்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நீதிக்கான நெடிய காத்திருப்பும் பெண்கள் மத்தியில் சட்டத்தின் மீதான அதிருப்தியை ஏற்படுத்து கின்றன. இதைப் போக்க வேண்டியது அரசின் கடமை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x