Published : 07 Jan 2024 09:09 AM
Last Updated : 07 Jan 2024 09:09 AM
ஒரு பெண்ணின் சந்தேகத்துக்குரிய மரணத்தையொட்டி சட்டென்று கட்டியெழுப்பப்படுகிற புனித பிம்பம், பெரும்பாலானோரை வாயடைக்கச் செய்துவிடுகிறது. ரூப் கன்வர் மரணத்தில் நடந்ததும் அதுதான். பம்பாய் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மீனா மேனன், கீதா சேஷு, சுஜாதா ஆனந்தன் ஆகிய மூவரும் ரூப் கன்வரின் கிராமத்துக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து வெளியிட்ட ஆய்வறிக்கையும் அதைத்தான் வழிமொழிகிறது.
ரூப் கன்வரின் மரணத்தில் பலரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னபோது, வெகு சிலர் அந்த நிகழ்வை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்திப் பேசியுள்ளனர். 1987 செப்டம்பர் 4 அன்று ரூப் கன்வர் ‘சதி’க்குப் பலியானதைத் தொடர்ந்து இந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களும் தியோராலா கிராமத்துக்குச் சென்றனர். ரூப் கன்வர் தீயில் பொசுங்கிய இடம் அவர்கள் சென்றபோது ‘சதி தலமா’க மாற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருந்திருக்கிறது. செங்கற்களால் சிறிய மேடை எழுப்பப்பட்டு அதன் மேல் காவி வண்ணத் துணி போர்த்தப்பட்டு இருந்ததாம். ஆட்டோ, கார், பேருந்து, ஒட்டகம் என வெவ்வேறு வாகனங்களில் வெளியூர் மக்கள் ‘சதி தல’த்தைப் பார்வையிட வந்தவண்ணம் இருந்தனர். ஏழு ராஜபுத்திர இளைஞர்கள் கையில் வாளோடு அந்தச் செங்கல் அமைப்பைச் சுற்றி வலம்வந்தபடி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT