Published : 10 Dec 2023 04:20 AM
Last Updated : 10 Dec 2023 04:20 AM

ப்ரீமியம்
திருமணத்துக்குத் தேவை மனமா, பணமா?

பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளான நவம்பர் 25 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கில் இன்றைக்கும் முக்கியமான பிரச்சினையாக வரதட்சிணையைப் பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டனர். திருமணங்களின் போக்குகளும் அவற்றின் தன்மைகளும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவிட்டபோதும் இப்போதும் தொகைகள் பேசி, நகைகள் பேசி, கொடுக்கல் வாங்கலோடுதான் கல்யாணங்கள் நிகழ்கின்றன. காதலித்துக் கல்யாணம் செய்பவர்களும் அக்காதலை வீட்டில் தெரிவிக்கும்போது சாதி, மதம் என்பதோடு ‘வசதி எப்படி?’ என்கிற பேச்சும் எழுகிறது.

கல்வியில் முதன்மை வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணத்துக்கான தொகையும் அதிகம். நகைகள் கிலோ கணக்கில் பேசப்பட்டு, தொகைகள் கோடிக்கணக்கில் கைமாறப்படுகின்றன. இரண்டு மனங்களின் கூடுகையை வெறும் பணத்தில் தீர்மானித்துவிட்டு அதைப் புனிதமென்று மினுக்கம் பூசுவதுதான் வேடிக்கை. கணவன் வீட்டுக்குப் போகும்போது தான் எடுத்துக்கொண்டு போகும் பணம், பவுன், சீர்களை வைத்தே தங்கள் கெளரவத்தைத் தீர்மானிக்கிறார்கள் பல பெண்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x