Published : 03 Dec 2023 05:57 AM
Last Updated : 03 Dec 2023 05:57 AM
ஏதோவொரு கணத்தில் நம் வாழ்வில் எதிர்ப்படுகிற நிகழ்வோ சொல்லோ மனிதரோ அதுவரை நாம் நினைத்துக் கூடப் பார்க்காத திசையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லக்கூடும். அப்படியொரு தருணம் முத்துலட்சுமியின் வாழ்க்கையிலும் வாய்த்தது.
கணவனை இழந்த பிராமணக் கைம்பெண்களுக் காகச் சகோதரி சுப்பலட்சுமி நடத்திவந்த இல்லத்தில் பிராமணர் அல்லாத பெண்களைச் சேர்ப்பதற்கு அந்த இல்லத்துக்கு நிதியுதவி அளித்துவந்தவர்கள் மறுத்தது முத்துலட்சுமியை மிகவும் பாதித்தது. எவ்விதப் பேதமும் இன்றி அனைத்து சாதிப் பெண்களும் தங்கும் வகையில் ஓர் இல்லத்தையும் படிக்கும் வகையில் ஒரு பள்ளியையும் அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் முத்துலட்சுமியின் மனதில் தீப்பொறியாக விழுந்தது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் நாளும் வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT