Published : 08 Oct 2023 08:46 AM
Last Updated : 08 Oct 2023 08:46 AM
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வங்காள மாகாணம் (Bengal Presidency) பெரும்பங்காற்றியது. தற்போதைய மேற்கு வங்கமும் வங்க தேசமும் இணைந்த வங்காள மாகாணம், பிரிட்டிஷ் ஆட்சியின் தலைநகராகச் செயல்பட்டதால் 17ஆம் நூற்றாண்டிலேயே அது வளர்ச்சி காணத் தொடங்கியது. கல்வியறிவு கிடைக்கப்பெற்றதால் இலக்கியத்திலும் அரசியல் அறிவிலும் அங்கிருந்த மக்கள் மேலோங்குவதற்கான சூழல் அமைந்தது. ஆனால், அது அனைத்துத் தரப்புக்குமான வளர்ச்சியாக அமையவில்லை.
சாதிய, வர்ணாசிரமப் பிரிவினைகள் மேலோங்கியிருந்த அந்தக் காலத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கே கல்வி கைசேரவில்லை. ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைகள் மணம் முடிக்கப்பட்ட சூழலில் கல்வி குறித்து இந்தியப் பெண்கள் கனவுகூடக் காண முடியாத அவலநிலை. அப்படியொரு சூழலில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய விடுதலை, சமூகச் சீர்திருத்தம் ஆகிய இருவிதமான போராட்ட வடிவங்களைத் தலைவர்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT