Published : 01 Oct 2023 08:06 AM
Last Updated : 01 Oct 2023 08:06 AM
கல்வி ஒருவரது சிந்தனையைத் தெளிவாக்கி அறிவை விசாலப்படுத்தும் என்பதற்காகத்தான் பெண் கல்விக்காகப் பலர் போராடினர். ஆனால், நூல் பல கற்றுத் தேர்ந்தும் மூளையில் படிந்து கிடக்கும் பிற்போக்குத்தனத்தைச் சிலரால் கைவிட முடியாதது முரணே. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என நாம் கொண்டாடுகிற ஒருவர் அப்படியான கசப்பான உண்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆனால், அவரது பிற்போக்குத்தனத்தைத் தன் அறிவாலும் திறமையாலும் மாற்றிக்காட்டியவர் கமலா சோஹோனி.
பம்பாயின் மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய அப்பா நாராயணராவ், அப்பாவின் சகோதரர் மாதவராவ் இருவரும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தவர்கள். பெங்களூரு ‘டாடா அறிவியல் நிறுவன’த்தில் (தற்போது இந்திய அறிவியல் நிறுவனம்) வேதியியலில் பட்டப்படிப்பை முடித்த ‘முதல்’வர்கள். வீட்டுப் பெரியவர்கள் இருவர் புகழ்பெற்ற வேதியியலாளர்களாக இருப்பதைப் பார்த்து வளர்ந்த சிறுமி கமலாவுக்கு, வளர்ந்த பிறகு தானும் அவர்களைப் போலவே வேதியியல் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் பிறந்தது. அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக்கொண்டார். அவர்களைப் போலவே பம்பாய் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற கமலா, 1930இல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை வேதியியல் படிப்புக்கு விண்ணப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT