Published : 20 Aug 2023 08:24 AM
Last Updated : 20 Aug 2023 08:24 AM
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவந்த காலம். இன்றைய சென்னையின் தங்கசாலை தெருவில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகிருந்து இந்தி எதிர்ப்பு வீரர்கள் சிலர் ‘தமிழ் வாழ்க!’ ‘இந்தி ஒழிக!’ ஆகிய முழக்கங்களுடன் கைகளில் தமிழ்க் கொடியுடன் புறப்பட்டனர். தங்கசாலை தெருவைத் தாண்டி ஆதியப்பன் தெருவில் நுழைந்த அவர்கள் அங்கிருந்த இந்து தியாலஜிகல் பள்ளியின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களில் ஐந்து பேர் பெண்கள். அந்த ஐவரில் ஒருவர்தான் டாக்டர் தருமாம்பாள்.
மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வேலூர் சிறை சென்றவர்களில் மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், பட்டம்மாள், மலர்முகத்தம்மாள் ஆகியோருடன் தருமாம்பாளின் மருமகள் சீதம்மாளும், ஒரு வயதுப் பேரனும், நான்கு வயதுப் பேத்தியும் அடங்குவர். அதற்கு அடுத்த வாரத்திலேயே தருமாம்பாளின் இன்னொரு மருமகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றார். இவ்வாறு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற பெண்கள் மொத்தம் 73 பேர். அவர்களுடன் சிறை புகுந்த குழந்தைகள் 32 பேர். பெண்களை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT