Published : 23 Jul 2023 07:02 AM
Last Updated : 23 Jul 2023 07:02 AM
பெண்கள், ஆண்கள், குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது திருமணங்கள் குறித்துப் பேசியே ஆக வேண்டும். திருமணம் என்பதே மனிதர்களின் சுயநல ஏற்பாடுதான். தனக்கென ஒரு மனைவி, தனக்கு மட்டுமே பிறந்த பிள்ளைகள் என்கிற உத்தரவாதத்துக்கு ஒவ்வோர் ஆணுக்கும் பெண் தேவைப்பட்டாள். அவள் வீட்டுப்படி தாண்டாமல் இருக்கவும், மற்ற ஆண்களைச் சந்திக்கும் வாய்ப்பை முறியடிக்கவும் பல கற்பிதங்களை அந்தக் காலத்தில் வகுத்தனர்.
பெண் பூ போன்றவள், தெய்வம் போன்றவள் என்று சொல்லிப் பாதுகாக்கப்பட வேண்டியவளாகச் சித்தரித்தனர். கோயில்களில் சிலைகளைக் கருவறையில் வைத்துப் பூசிப்பதுபோல அவளை மதித்து இவர்கள் பூசிப்பதாகவும் ஒரு மாயையை உருவாக்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT