Published : 18 Jun 2023 06:13 AM
Last Updated : 18 Jun 2023 06:13 AM
நாம் யாரும் உலகின் இந்த மூலையில், இந்தக் குடும்பத்தில், இந்த உருவத்தில், இந்தப் பாலினத்தில் பிறப்பேன் என்று முடிவெடுத்து அதற்காக முயன்று பிறப்பதில்லை. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மனமுவந்தோ கட்டாயத்தாலோ ஏதோ ஒன்றால் உந்தப்பட்டு நிகழ்த்தும் உறவின் காரணமாகக் கரு உருவாகி அந்தக் கரு உருக்கொண்டு நம் உருவில் இங்கு வந்து விழுகிறோம்.
இப்படிப் பிறந்துவிட்ட பிறகு, ஏதோ பிறப்பிலேயே தான் சாதித்து ஆணாகப் பிறந்துவிட்டதான இறுமாப்பு, சிலருக்கு எப்படி வருகிறது என்பது விந்தையிலும் விந்தை. தற்செயலாக ஆணாகப் பிறந்துவிட்டதாலேயே ஆண் எப்படி உயர்ந்தவனாக முடியும்? அதே தற்செயலாகப் பெண்ணாகப் பிறந்துவிட்ட பெண் எப்படித் தன் சுயம் தொலைத்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படலாம்? இதற்குப் பொதுவாகப் பலரும் முன்வைக்கும் காரணம் பெண்ணுக்கு ஆணின் பாதுகாப்பு அவசியம், அவள் தனியாக விடப்பட்டால் அது அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுதான். பெண் பலவீனமானவள்; ஒன்று அவளுக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழலாம், இல்லையெனில் அவளே எந்த ஆணிடமாவது ஏமாந்து தன்னைப் பறிகொடுத்துவிடுவாள் என்று இந்தச் சமூகம் கருதுகிறது. எப்படியிருந்தாலும் அவளைப் பாதுகாக்க எடுக்கும் அத்தனை முயற்சியும் அவள் குழந்தையாகப் பிறப்பதிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT