Last Updated : 03 Jun, 2014 09:59 AM

 

Published : 03 Jun 2014 09:59 AM
Last Updated : 03 Jun 2014 09:59 AM

ஸ்மார்ட் மருத்துவ ஆலோசகர்

வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகம், அதிகமும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிவருகிறது. சமீபகாலமாகக் கைபேசிகளிலும் அதிநவீன மாற்றங்கள் வந்துவிட்டன. இது ‘ஸ்மார்ட் போன்’களின் காலம். ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும் 'Apps' எனப்படும் அப்ளிகேஷன் பயன்பாடுகள் பல வேலைகளையும் இருந்த இடத்திலிருந்தே செய்ய உதவுகின்றன.

உடனடியாகத் தகவல்களைப் பெற, தகவல்களை அனுப்ப, பயணச்சீட்டுகளை பதிவு செய்யப் போன்றவற்றுக்கு ‘ஆப்ஸ்’ எனப்படும் இந்தப் பயன்பாடுகள் பயன்படுவதுடன், இப்போது மருத்துவத் தகவல்கள், உடற்பயிற்சி ஆலோசனைகள், யோகாசன வழிமுறைகளையும் தர ஆரம்பித்துவிட்டன. உடல் ஆரோக்கியம் குறித்த சில ‘ஆப்ஸ்' பயன்பாடுகளைப் பார்ப்போம். இவற்றில் சில இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கூடியவை. சில கட்டணம் செலுத்திப் பெறக் கூடியவை.

இந்த ‘ஆப்ஸ்’களை பயன்படுத்தச் சாதாராண இணையதளப் பயன்பாட்டுக் குச் செலுத்தும் கட்டணமே ஆகும். Google ‘play store’ எனப்படும் தொடர்பில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்களுடைய சொந்த மருத்துவக் குறிப்புகளைப் பதிவு செய்துகொள்ளவும், உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கக் கூடியதாகவும் இவை அமைந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் இக்காலத்துக்கு ஏற்ற ஸ்மார்ட் மருத்துவ ஆலோசகராகத் திகழ்கின்றன இந்த ‘ஆப்ஸ்'.

WEB MD:

24 மணி நேரமும் மருத்துவத் தகவல்களைத் தரக்கூடியது. மேலும் முதலுதவி, உள்ளூர் மருத்துவமனைகளின் பட்டியல் விவரங்கள் அடங்கியுள்ளன.

ASK A DOCTOR:

இதில் பயன்படுத்துபவர் பதிவேற்றும் மருத்துவ அறிக்கைகள், உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து மருத்துவ நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர்.

PULSE POINT:

இதய நோயாளி களுக்கு உதவியாக இருக்கும் இந்தப் பயன்பாடு மூலம், முதலு தவி தரப்படும்போது தானியங்கி இணைப்பின் மூலம் மருத்துவத் தகவல்களைப் பெறலாம்.

RUN KEEPER:

காலையில் சரியான நேரத்துக்கு மணி அடித்து எழுப்பி, செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளின் பட்டியலை நினைவூட்டும். ஓடுதல், மிதமாக ஓடுதல் போன்றவற்றின் பதிவுகளையும் பராமரிக்கிறது.

MY FITNESS PAL:

ஆரோக்கியமான உடல்நலத்துக் கான ஊட்டச்சத்துகள் பற்றியும், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சத்தான உணவு வகைகளின் தேவையைப் பற்றியும் விரிவான தொகுப்பு இதில் உள்ளது.

SIMPLY YOGA:

யோகா பயிற்சிகள் பற்றிய முழுமையான வழிகாட்டியாகத் திகழ்கிறது. ஒலி, வீடியோ உடனான செயல் விளக்கங்களுடன் இந்தப் பயன்பாடு அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x