Published : 19 Sep 2015 12:21 PM
Last Updated : 19 Sep 2015 12:21 PM

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாதாம்

பாதாம் பருப்பு பொதுவாகவே விலை உயர்ந்ததாகக் கருதப்படுவதால், பலரும் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதேநேரம், தினசரி ஒரு பாதாம் பருப்பை உண்டுவந்தால் அதிலிருந்து சிறப்பான சத்துகள் கிடைக்கும்.

l பாதாம் (வாதுமை) எனப்படும் கொட்டை அல்லது பருப்பு Prunus Dulcis எனப்படும் அறிவியல் பெயர் கொண்ட மரத்திலிருந்து. இந்தப் பருப்பு சற்று இனிப்புத்தன்மை கொண்டது. நம் பகுதிகளில் காணப்படும் நாட்டு வாதுமை, இதிலிருந்து வேறுபட்டது.

l ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்பு 161 கலோரி சக்தியையும் 2.5 கிராம் மாவுச்சத்தையும் (கார்போஹைட்ரேட்) தரும்.

l நாம் நினைப்பதற்கு மாறாகப் பாதாம் பருப்பின் மேற்பகுதியில் உள்ள பழுப்பு நிறத் தோலில்தான் சத்து அதிகம். அதில் ஆன்ட்டிஆக்சிடண்ட் இருக்கிறது.

l வைட்டமின் இ சத்தை அதிகம் கொண்டது பாதாம் பருப்பு.

l பாதாம் பருப்பில் உள்ள மக்னீசிய சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும்.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x