Published : 18 Jan 2020 10:44 AM
Last Updated : 18 Jan 2020 10:44 AM

நல வாழ்வு கேப்ஸ்யூல்: குணப்படுத்தக்கூடிய குழந்தைகளின் புற்றுநோய்கள்

ஷங்கர்

குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களில் 80 சதவீதத்தைக் குணப்படுத்த இயலும். இந்தியாவைப் பொறுத்தவரை 40 முதல் 80 சதவீதம் வரை குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயைக் குணப்படுத்த முடிகிறது என்கிறார் ராஜீவ்காந்தி புற்றுநோய் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மருத்துவர் சந்தீப் ஜெயின். குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயை உடனேயே அடையாளம் கண்டுவிட்டால் அதைக் குணப்படுத்துவது எளிது.

ரத்தப் புற்றுநோய், சிறுநீரகக் கட்டிகள், கிருமி செல் கட்டிகள் போன்றவை உள்ளிட்ட புற்றுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடியவை. ஆரம்பத்திலேயே நோயறிதல், சரியான சிகிச்சை, தொடர்ந்து மருந்தெடுத்தல் மூலம் குணம் காண முடியும். கண்ணில் ஏற்படும் வெள்ளைத்திட்டு, குருடு, விழிப்பந்து வீங்குதல் ஆகியவை புற்றுநோய்க்கான அடையாளங்கள்.

வயிறு, இடுப்பு, தலை, கழுத்து ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம், மர்மக் காய்ச்சல், உடல் எடை குறைதல், பசிக்குறைவு, எளிதாகக் காயப்படுதல், ரத்தப்போக்கு, எலும்பு நோவு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

மருத்துவர்கள் குறைவு மருத்துவ வருவாய் அதிகம்

உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு இன்னமும் நீடிக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் வசதி குறைந்தவை, நோயாளிகள் நெருக்கடிகளும், ஊழியர் தட்டுப்பாடும் கொண்டவை.

ஆனால், தனியார் மருத்துவ சேவைத் துறையோ கொழிக்கும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா திகழ்கிறது. குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சேவை என்ற வாசகங்களை இந்தியாவின் பெருநகரங்கள் எங்கும் விளம்பரமாகப் பார்க்கலாம். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் தனியார் மருத்துவமனைகளின் சந்தை 57,000 கோடி ரூபாய் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளி மருத்துவருக்குச் சிறை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கெய்ன் குமார், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வலிநீக்க மாத்திரைகளைப் பரிந்துரைத்ததால் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையைப் பெற்றுள்ளார்.

லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மோசடி இதுவாகும். கலிபோர்னியாவைச் சேர்ந்த கெய்ன் குமாருக்கு 56 வயது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்ட பெற்றுள்ள அவர் யோடு விடுதலை பெற்ற பின்னர் மூன்று ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x