Published : 20 May 2014 02:32 PM
Last Updated : 20 May 2014 02:32 PM
#வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு முகம், கை, கால் ஆகிய உறுப்புகள் கறுத்துப் போகும், தடிப்புகளும் வரும். இதற்குத் தீர்வாகக் குளிக்கும் முன் தயிரை எடுத்துக் குழந்தையின் முகம், கை கால்களில் நன்றாகத் தடவி 5 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வைத்தால் முகம் பளபளப்பாக இருக்கும். உடலும் அரிக்காமல் இருக்கும்.
#குழந்தைகளுக்கு அடிக்கடி கால் வலி ஏற்படலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெயை எடுத்துச் சூடுபடுத்தவும். குழந்தைகள் படுக்கப் போகும் முன் கால்களை நீட்டச் சொல்லிப் பொறுத்துக்கொள்கிற சூட்டில் முழங்காலிலிருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்துவிட்டால், கால் வலி போகும். நன்றாகத் தூக்கம் வரும்.
#குழந்தைகளுக்குச் சளி பிடித்தாலோ, தொண்டை கரகரப்பாக இருந்தாலோ பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 சிட்டிகை மிளகுத் தூள் போட்டு நன்றாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து 3 நாளைக்குக் கொடுத்துவந்தால் சரியாகிவிடும்.
#பிறந்த குழந்தைகள் கையை விட்டு இறங்காமல் அழுதால், எதற்கு அழுகிறது என்று புரியாது. வெற்றிலையில் எண்ணெயைத் தடவி விளக்கில் காட்டவும். பிறகு அதை எடுத்துப் பொறுத்துக்கொள்கிற சூட்டில் வயிற்றின் மேல் போட்டால் வயிற்று வலி இருந்தால் உடனே சரியாகிவிடும்.
#குழந்தைகளுக்குக் கர்ப்பச் சூட்டினால் கண்கள் பொங்கி வரும். பூளை கட்டும். கண் சிவப்பாக இருந்தால், தாய்ப்பாலை இரண்டு கண்களிலும் பீய்ச்சிவிட்டால் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT