Published : 14 Feb 2015 01:20 PM
Last Updated : 14 Feb 2015 01:20 PM
பாலுடன் சேர்த்துத் தேநீர் அருந்துவதால் தேயிலையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட் சத்துகள் பாதிக்கப்படுமா?
கிரீன் (பசுந் தேநீர்), பிளாக் (கருந் தேநீர்) ஆகிய இரண்டிலுமே பால் கலந்து குடிக்கலாம். பாலால், அவற்றில் உள்ள இயற்கை அம்சங்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. அதனால் உங்களுக்கு விருப்பம் இருந்தால், பால் சேர்த்து தேநீர் அருந்துவதில் தவறில்லை.
உலகளாவிய அளவில் புகைப்பிடிப்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளதா?
புகைப்பிடிப்போர் விகிதம் அதிகரித்து இருப்பதாகவே சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பிரசாரங்களும் விளம்பரங்களும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது உலகம் முழுவதும் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 120 கோடியாக உள்ளது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள்தான்.
உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியுமா?
மிதிவண்டிப் பயிற்சி, ஜாக்கிங் மற்றும் 30 நிமிட வேக நடைப் பயிற்சியை தினம்தோறும் செய்துவந்தால் மன அழுத்தம் நன்றாக குறையும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழி என்ன?
உங்களை அழுத்தும் பிரச்சினையைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எவ்வளவுதான் முக்கியமானதாக இருந்தாலும், அதை உணர்வாக வெளிப்படுத்தி விடுங்கள்.
உங்கள் பிரச்சினையை ஒரு படம் பார்ப்பது போல, தொலைவில் வைத்து வேடிக்கை பாருங்கள். பெரிதாக உணர்ச்சிவசப்படாமல், தற்போதைக்கு அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதை மட்டுமே யோசியுங்கள்.
ஊசி தொடர்பான பயத்திலிருந்து எப்படி விடுபடுவது?
மருத்துவர் ஊசி போடும்போது அதைப் பார்க்காமல் இருப்பது வலியுணர்வைக் குறைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT