Published : 13 Dec 2014 03:26 PM
Last Updated : 13 Dec 2014 03:26 PM

ஹெல்த் டிப்ஸ்

கொட்டாவி விடுவது அருகில் உள்ளவர்களையும் தொற்று நோய் போல் தொடர வைக்குமா?

ஒருவர் கொட்டாவி விட்டால், அது அடுத்தவர்களையும் கொட்டாவி விடத் தூண்டும், இது உண்மைதான். கொட்டாவி விடும் நூறு பேரில் ஐம்பது சதவீதம் பேர் கொட்டாவியை மற்றவர்களுக்குத் தொற்ற வைக்கின்றனர். ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்ப்பது மட்டுமல்ல, கொட்டாவி பற்றி ஒரு புத்தகத்தை வாசித்தால்கூடக் கொட்டாவி தொற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாம் பயன்படுத்தும் பெர்ஃபியூமில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன?

அன்றாடம் பயன்படுத்தும் பெர்ஃப்யூம்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் தோல், நுரையீரல், ரத்த தமனிகள்வரை உடலில் ஊடுருவிச் செல்கின்றன. கல்லீரல் நஞ்சடைதல், ஒவ்வாமை, கற்றல் குறைபாடு, எதிர்ப்புசக்திக் குறைவு, புற்றுநோய் போன்றவற்றை இவை உருவாக்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x