Published : 06 Dec 2014 03:23 PM
Last Updated : 06 Dec 2014 03:23 PM
மற்றொரு பெயர் : கருப்பூரவள்ளி
தாவரவியல் பெயர்: Coleus aromaticus
அடையாளம்: நெருக்கமான கிளைகளில் சற்றே தடிமனான, வாசம் மிகுந்த இலைகளைக் கொண்ட மூலிகைச் செடி. புதர் போல், 2 அடி உயரம்வரை வளரும். பீட்சாக்களில் சேர்க்கப்படும் ஆரிகானோ என்ற நறுமணப் பொருளைப் போன்ற வாசத்தைக் கொண்டது. செடியின் கிளையைக் கிள்ளி நடுவதன் மூலம் புதிய செடியை வளர்க்கலாம்.
தாயகம்: தெற்கு, கிழக்கு ஆப்பிரிக்கா என்றாலும் வெப்பமண்டல நாடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
கைமருத்துவப் பயன்பாடு: இச்செடியின் இலைகள் கைமருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கிழங்குப் பகுதி பல மருந்துகளில் மூலப் பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. சளி, இருமல், தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கற்பூரவல்லி இலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு நல்ல மருந்து. இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.
தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT