Published : 13 Aug 2016 12:08 PM
Last Updated : 13 Aug 2016 12:08 PM

பூக்களின் மருத்துவக் குணங்கள்

செம்பருத்தி பூ:

நான்கு செம்பருத்திப் பூக்களைச் சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீரில் நன்றாகக் காய்ச்சி, சுண்டிய பிறகு அதை வடிகட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேவையான சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் இதயம் வலுப்படும்.

மந்தாரை பூ:

மந்தாரைப் பூவை நிழலில் காய வைத்து இடித்துத் தூளாக்கிச் சலித்துச் சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரை அல்லது தேன் குழைத்துச் சாப்பிட்டால் மலம் இளகிப் போகும்.

வேப்பம் பூ:

வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து, பருப்பு ரசத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், குடல் கிருமிகள் போகும்.

வெங்காயப் பூ:

வெங்காயப் பூக்களை நீரில் போட்டு, அத்தண்ணீரைக் காலையிலும் மாலையிலும் குடித்துவந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

ஆவாரம் பூ:

ஆவாரம் பூவை பச்சைப் பயறுடன் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்துக் குளித்துவந்தால் உடல் நமைச்சல் போகும்.

தும்பை பூ:

தும்பைப் பூவை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, தலை முழுகிவந்தால் தலை பாரம் குறையும்.

இலுப்பை பூ:

இலுப்பைப் பூக்களைப் பால் விட்டு அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து தேவையான சர்க்கரை சேர்த்துச் சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், உடல் இளைத்திருப்பது மாறும்.

மாம் பூ:

மாம் பூவைக் காய வைத்துப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிட்டால் ரத்தபேதி நிற்கும்.

தூதுவளை பூ:

தூதுவளைப் பூவை பாலுடன் சேர்த்துக் காய்ச்சிக் குடித்துவந்தால், ஆஸ்துமா மட்டுப்படும்.

வில்வப் பூ:

வில்வப் பூ இதழ்களை வதக்கி லேசான சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுத்தால் கண்வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு போன்றவை குறையும்.

வாகை பூ:

வாகைப் பூவை அரைத்துத் தோலில் ஏற்படும் கட்டியின் மேல் வைத்துக் கட்டினால், கட்டி உடையும்.

வாகைப் பூவை அரைத்துத் தோலில் ஏற்படும் கட்டியின் மேல் வைத்துக் கட்டினால், கட்டி உடையும்.

மருதாணி பூ:

மருதாணிப் பூக்களைத் தலையணைக்கு அடியில் வைத்தால் நல்ல தூக்கம் வரும். அத்துடன் உடல் வெப்பம் தணியும்.

ரோஜா பூ:

ரோஜா பூவின் இதழ்களைக் காய வைத்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், வாய்ப்புண் ஆறும்.

சாமந்தி பூ:

சாமந்திப் பூவை தினமும் தலையில் சூடிவந்தால் தலைமுடி உதிராமல் இருக்கும். அத்துடன் தலையில் பேன் தொல்லை இருக்காது.

மகிழம் பூ:

மகிழம் பூவை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, தலையில் சிறிது நேரம் ஊறவைத்துக் குளித் தால், காதுகளில் ஏற்படும் தொல்லை போகும்.

தகவல் தொகுப்பு: பிரேமா தியாகராசன், திருச்சி - 21





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x