Published : 11 Jun 2016 01:44 PM
Last Updated : 11 Jun 2016 01:44 PM
# விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
# விளாம்பழத்தில் உள்ளே உள்ள சதைப் பகுதியை எடுத்து அத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
# விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்தமாகும். உடல் வளர்ச்சியைத் தூண்டும். ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்கள் மடிந்துவிடும்.
# குழந்தைகள் அடிக்கடி விளாம்பழத்தை சாப்பிட்டுவந்தால், எலும்புகள் உறுதியடையும். உடல் நன்றாக வளரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
# விளாம்பழம் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். பற்களுக்கு உறுதி அளிக்கும்.
# வயதான காலத்தில் இதயத் துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.
# விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, பிடிப்பு, உடலில் ஊசி குத்துதல் போன்றவற்றைப் போக்கும்.
- பிரேமா தியாகராசன், திருச்சி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT