Published : 07 Jan 2017 10:31 AM
Last Updated : 07 Jan 2017 10:31 AM
முந்திரிப் பருப்பு சுவையாக இருந்தாலும், அதன் விலை சற்றே மிரட்டும். அளவாகச் சாப்பிட்டால் முந்திரி உள்ளிட்ட பருப்புகள் உடலுக்குப் பல ஆக்கபூர்வமான பலன்களை நம் உடலுக்குத் தரக்கூடியவை. அந்தப் பலன்களில் சில:
# தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.
# முந்திரிப் பருப்பில் தாமிர சத்து இருப்பதால், இதன் மூலம் அடர்த்தியான, கறுப்புக் கூந்தல் வளரும். முந்திரிப் பருப்பில் மக்னீசியமும் இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.
# ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி), பான்டோதெனிக் அமிலம் (வைட்டமின் பி5) உள்ளிட்ட வைட்டமின்களை முந்திரிப் பருப்பு கொண்டுள்ளது.
# தினசரி முந்திரிப் பருப்பை உட்கொண்டால், சிறுநீரகக் கற்களில் 25 சதவீதம் மட்டுப்படும்.
- நேயா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT