Last Updated : 05 Jan, 2014 12:00 AM

 

Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

தெரிந்த கல்லூரி... தெரியாத விஷயங்கள்: ஆண்டுக்கு 15 முறை ரத்ததானம்

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியார் ஜானகி அம்மாள் தனது கணவர் எம்.ஜி.ஆரின் நினைவாகவும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியை 1996 ஆம் ஆண்டு தொடங்கினார்.

கலை அறிவியல் கல்லூரிகளில் இயற்பியல்,வேதியியல், விலங்கியல்,உயிரியியல் போன்ற பாடப்பிரிவுகளை தான் பிரதானமானதாக சொல்வார்கள். ஆனால் இக் கல்லூரியிலோ நாட்டியா, பயோ இன்ஃபார்மெடிக்ஸ், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் போன்ற வாழ்க்கைக்கு கை கொடுக்கும் நவீன கால படிப்புகளும் உண்டு.

படிப்பு என்பதை மீறி சமூக அக்கறையுள்ள பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது இக்கல்லூரியின் குறிக்கோளாம். இதன் ஒரு பகுதியாக வருடத்திற்கு சுமார் 15 மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் பல்வேறு ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரியில் பயிலும் 3000 பேரில் 1000-த்திற்கும் அதிகமானவர்கள் என்.எஸ்.எஸ், ரோட்ராக்ட், ரெட் ரிப்பன், யூத் ரெட் கிராஸ் போன்றவற்றில் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். மாதாமாதம் இந்த மாணவிகள் சார்பாக வெவ்வேறு சமுதாயப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘எழுத்தறிவித்தல்’ என்னும் திட்டத்தின் மூலம் கிராமம் கிராம மாக சென்று கையெழுத்து போடத் தெரியாத மக்களுக்கு இக்கல்லூரி மாணவிகள் கையொப்பமிட கற்றுத் தருகிறார்கள். அதுமட்டுமன்றி சிறு சிறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு கையெழுத்து போட கற்று கொடுத்துள்ளார்களாம்.

இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு மாணவியும் தங்களின் பிறந்த நாளின் போது கல்லூரியில் தங்கள் சார்பில் ஏதாவது ஒரு மரக்கன்றை நட்டு வருகிறார்கள்.

தமிழார்வம், இசையார்வம், கொண்ட மாணவர்களை ஊக்குவிப் பதற்காக செனட் கிளப் ஒன்றும் இங்கு இயங்கி வருகிறது. தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் இந்த கல்லூரியின் செனட் மாணவிகள் பல கோப்பை களை வென்றுள்ளனர்.

பிரபல பின்னணி பாடகி வினயா இந்தக் கல்லூரியின் மேடைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவியாம். தவிர அருணாதேவி, சங்கீதா போன்ற முன்னாள் மாணவிகள் சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருகிறார்கள்.

நீச்சல் போட்டிக்கும் இங்கு பிரதான முக்கியத்துவம் கொடுக் கிறார்கள். மூன்றாமாண்டு மாணவி ப்ரீத்தி தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். விரைவில் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளாராம்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக தீபாவளி,கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்த மதப் பண்டிகை வந்தாலும் மாணவிகள் சேர்ந்து முன்னதாகவே ஒரு மாதிரி பண்டிகையை கொண்டாடி விடுவார்களாம்.இந்த பழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x