Published : 28 Oct 2014 12:54 PM
Last Updated : 28 Oct 2014 12:54 PM
“அதைத் தொடாதே தம்பி, இதைச் செய்யாதே பாப்பா!" என்று குழந்தைகள் எந்தச் செயலை எல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறீர்களோ, அதைச் செய்து பார்க்கத்தான் குழந்தை தீவிரமாக விரும்பும். அப்போது நீங்கள் கோபப்படாமல் புரிந்துகொள்ள வேண்டியவை:
1. சில நேரங்களில் குழந்தை வெறுப்படைந்து தன் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறியும். அந்த நேரத்தில் குழந்தை என்ன நினைக்கிறது, எப்படி உணர்கிறது என்பதை வார்த்தைகளாக வெளிப்படுத்த ஊக்குவியுங்கள்.
2. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளக் குழந்தை ஆர்வமாக இருக்கும். நீங்கள் இதுவரை திரும்பத் திரும்பச் சொல்லி வந்த கதை வேண்டாம் எனச் சொல்லும். இது நல்ல அறிகுறி.
3. ஒவ்வொரு புதிய முயற்சியும் குழந்தைக்குப் புதிய அனுபவத்தைத் தரும்.
4. விதவிதமான வடிவங்களில் இருக்கும் பொம்மைகளைக் கொண்டு புதிர் விளையாட்டுகளை விளையாடினால், குழந்தை புதிய வடிவங்களை எளிதாகக் கற்றுக் கொள்ளும்.
சுய உணர்வு: குழந்தை தன்னுடையது எனச் சில பொருள்கள் மீது உரிமை கொண்டாடும். இது ஒரு விதமான சுயமரியாதையின் வெளிப்பாடு.
உடல்: குழந்தை சடசடவென வேகமாகப் பல செய்கைகளைச் செய்ய விரும்பும். ஆனால், எது பாதுகாப்பனது என்பதை நீங்கள்தான் பொறுமையாகச் சொல்லித் தர வேண்டும்.
உறவுகள்: தான் செய்யும் சின்னச் சின்ன செயல்களையும் கவனித்து, அங்கீகரித்துப் பாராட்ட வேண்டுமென குழந்தை உங்களிடம் எதிர்பார்க்கும்.
புரிதல்: 1, 2,3 என எண்களை வரிசையாகக் குழந்தை கற்றுக்கொள்ளத் தொடங்கும்.
கருத்துப் பரிமாற்றம்: இப்போது சில சொற்களைக் குழந்தையால் உச்சரிக்க முடியும். அதனால், மேலும் பல புதிய சொற்களைக் கற்றுக் கொடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT