Published : 03 Nov 2018 10:36 AM
Last Updated : 03 Nov 2018 10:36 AM

பக்கவிளைவுகள் குறைந்த ஃபிசியோதெரபி சிகிச்சை

விதவிதமான, புதிது புதிதான உடல் உபாதைகளைத் தாண்டி, உடல் சோர்வு, வலி, காயப்பட்டுக் கொள்ளுதல் என இன்னும் பல விதங்களில் நம் உடல் பாதிக்கப்படுகிறது.

அப்படியான காயங்களுக்கு, உடல் சோர்வுக்கெல்லாம் உகந்த சிகிச்சையாக ஃபிசியோதெரபி சிகிச்சை பார்க்கப்படுகிறது.

காயங்களைக் கண்டறிந்து, உடல் ரீதியாகவே சிகிச்சை தரும் அறிவியலே ஃபிசியோதெரபி. இதன் முக்கிய நோக்கம் வலியைக் குறைப்பதும், செயலிழப்பை குறைப்பதுமே.

சிறியவர் முதல் பெரியவர் வரை, தசை, எலும்பு, வாதம், சுவாசம், நரம்பு மண்டலம் தொடர்பான எந்த காயங்களுக்கும், விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், ஆண் / பெண்களின் ஆரோக்கியத்துக்காகவும் ஃபிசியோதெரபி பயன்படும்.

உபாதைகளையும் மீறி வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஃபிசியோதெரபி உதவும். சென்னையைச் சேர்ந்த ஃபிசியோதெரபி நிபுணர் முசபிஹா தஹசீன், இந்த சிகிச்சை முறை குறித்து விரிவாக விளக்குகிறார்.

"சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வதே பிசியோதெரபி நிபுணரின் வேலை. இது வலி நிவாரணம் மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் நடக்கும். இதனால் உடலில் நடக்கும் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்க முடியும். சுதந்திரமாக செயல்பட முடியும். வலி நிவாரணத்துக்கான ஆலோசனைகளையும் பிசியோதெரபி நிபுணர் வழங்குவார். ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சியும் தரப்படும்.

முதல் சந்திப்பில் உடல் நிலை, தினசரி நடவடிக்கைகளை செய்ய விட முடியாமல் தடுக்கும் உபாதைகள் போன்றவற்றைப் பேச முடியும். உடலை பற்றிய ஆய்வை பிசியோதெரபி நிபுணர் மேற்கொள்வார். பிறகு குறிப்பிட்ட நபருக்கு ஏற்றவாரு, ஆரோக்கியமாக வாழ ஏதுவான சிகிச்சை முறைகளை திட்டமிடுவார்.

காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது. மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரிசெய்யும். 

காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையைப் பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். பல்வேறு விசேஷ பரிசோதனைகளுக்குப் பிறகு நிபுணர் சிகிச்சையைத் தொடங்குவார்.

முக்கியமாக, பிசியோதெரபியினால் குறைந்த அளவு பக்க விளைவுகளே நேரும்.

வலி: உடலை வளைக்கும்போது வலி ஏற்படலாம். உடல் சரியாகும் போது அந்த வலி அதிகமாகும்.

வீக்கம்: இது பொதுவானதே. ஏனென்றால் திசுக்கள், சதை விரியும்போது வலுவடையும். அதே நேரத்தில் வீக்கம் ஏற்படும். சிகிச்சைக்குப் பின் குளிர்ந்த / சூடான ஒத்தடம் கொடுக்கும் போது வலி, வீக்கம் சரியாகும்.

அடிப்படை விதியே முழு சிகிச்சையை பிசகின்றி முடிப்பதுதான். வலி மற்றும் வீக்கம் காரணமாக சிகிச்சை தடைபட்டால் அது உபாதையை இன்னும் மோசமாக்கி நிவாரணத்தையும் தாமதமாக்கும். தேவை என்ன என்பது குறித்து பிசியோதெரபி நிபுணரிடம் பேசவேண்டும். அப்போதுதான் விரைவில் குணம் பெறத் தேவையான அறிவுரைகளை அவர் வழங்குவார்.

நிவாரண காலம்

ஒவ்வொரும் வித்தியாசமனாவர்கள். அதனால் குறிப்பிட்ட நிவாரண காலம் என்று எதுவும் கிடையாது. அது நபருக்கு நபர், காயத்தின் தன்மை பொருத்து மாறும். ஒருவர் மற்றவரை விட சீக்கிரம் நிவாரணம் பெறலாம். அது அவர்களின் வலி தாங்கும் அளவு மற்றும் காயத்தின் தன்மையைப் பொருத்தது.

இதன் பலன் எவ்வளவு நாள் நீடிக்கும்?

ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்குப் பின், ஒருவரின் உடல் முழுமையாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது. சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர்களென்றால், பிசியோதெரப்பி உங்களை பரிபூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.

இதற்கான மாற்று என்ன?

மாற்று சிகிச்சை என்றால், உடற்பயிற்சி, உடற்பயிற்சி மேலும் உடற்பயிற்சி மட்டுமே”.

physiojpg-முசபிஹா தஹசீன், ஃபிசியோதெரபி நிபுணர், சென்னை 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x