Published : 18 Oct 2025 07:48 AM
Last Updated : 18 Oct 2025 07:48 AM
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய, அப்போது புஸ்வாணம் வெடித்தது. அதனால், அந்தக் குழந்தையின் கண்ணில் பலத்த காயம். அந்தக் குழந்தை பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது.
வெடிக்காத பட்டாசை தொடக் கூடாது என்கிற விழிப்புணர்வு அந்தக் குழந்தைக்கு இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் பார்வையைப் பாதுகாத்திருக்கலாம். பட்டாசு விபத்துகளை ஆய்வு செய்தால், 90 சதவீதம் கீழ்க்கண்ட விழிப்புணர்வு இருந்திருந்தால், அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றியும், பட்டாசு பற்றிய விழிப்புணர்வு, அலட்சியமின்மை இல்லாமல் இருந்தால் தீக்காயம், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட விபத்துகளைத் தவிர்க்கலாம்.
விபத்தைத் தவிர்க்கும் வழிகள்: * பட்டாசுகளை எளிதில் தீ பிடிக்கும் இடங்க ளான சமையல் அறை, பூஜை அறையில் வைக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் பெற்றோர் உதவியுடன் வெடிக்க வேண்டும்.
* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அவர்கள் பட்டாசைத் தொட்டுவிட்டுக் கண்ணைத் தேய்க்கும்போது, அதில் உள்ள வெடிமருந்து கண்ணில்பட்டு,கண் உறுத்தல் ஏற்படும். இதைத் தவிர்க்க பட்டாசு வெடித்து முடித்த வுடன் குழந்தைகளைக் கைகளைக் கழுவ அறிவுறுத்த வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகே ஒரு முழு பக்கெட் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் தீயை அணைத்துவிட வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது தள்ளி நின்று நீண்ட ஊதுவத்திகளைக் கொண்டு வெடிக்க வேண்டும்.
* ராக்கெட்டைக் கண்ணாடி பாட்டில் அல்லது தகர டின்னில் வைத்து வெடிக்கக் கூடாது.
* ராக்கெட், பெரிய வெடிகளைக் குழந்தை களுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடி ‘பாலிகார்பனேட்’டால் ஆன (Polycar bonate) உடையாத கண்ணாடியை அணிந்து கொள்ளலாம்.
* வெடிக்காத பட்டாசுகளைத் தொடக் கூடாது. மீண்டும் வெடிக்க வைக்க முயலக் கூடாது. அவற்றைத் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட வேண்டும்.
* சாலைகள், தெருக்கள், குடியிருப்பு நிறைந்த பகுதிகளைத் தவிர்த்து, திறந்தவெளியில் வெடிப்பது நல்லது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றினாலே 50 சதவீத விபத்துகளைத் தவிர்க்கலாம்.
தாமதம் தவிர்ப்போம்: இரவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்படும் போது, இன்று திருவிழா நாள் என்பதால் கண் மருத்துவர் எங்கும் இருக்க மாட்டார் என்கிற எண்ணத்தில் அடுத்த நாள் தாமதமாக சிகிச்சைக்கு செல்லக் கூடாது. இந்தத் தாமதத்தால் பலர் கண் பார்வையை இழந்துவிடு கின்றனர். உடனடியாகச் சிகிச்சை எடுத்தால் பார்வையைப் பாதுகாக்க முடியும்.
எங்கே செல்லலாம்? - தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவை அணுக லாம். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கலாம். தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிப்பது காற்று மாசுபாட்டைத் தூண்டி முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், ஆஸ்துமா தொந் தரவு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. எனவே, உடல்நல பாதிப்பு, பார்வையிழப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக் கொள்வோம்.
செய்யக் கூடாதவை: பட்டாசு வெடித்துக் கண்ணில் காயம் ஏற்பட்டவுடன் செய்யக்கூடாத நான்கு செயல்கள்:
1. கண்ணை தேய்க்கக் கூடாது.
2. அழுத்தக் கூடாது.
3. ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கண்ணில் ஊற்றக் கூடாது.
4. மருத்துவரை அணுகாமல் மருந்துக் கடை களில் மருந்து வாங்கி ஊற்றிவிட்டு, கிருமி பாதிப்பு அதிகமான நிலையில் வந்தால் சிகிச்சை பலனின்றி பார்வையிழப்பு ஏற்படும்.
செய்ய வேண்டியவை
பட்டாசு வெடித்து கண்ணில் காயம் பட்டால் முதலில் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய அறிவுரைகள்:
1. கண், உடலில் உள்ள அனைத்து தீக்காயப் பகுதிகளையும் உடனடி யாகச் சுத்தமான குடிநீரால் நன் றாகக் கழுவ வேண்டும்.
2. பிறகு தாமதமில்லாமல் அருகே உள்ள மருத்துவமனையின் அவசர
சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும்.
இதனால் கண், உடல் பகுதிகளில் வெப்பம், வேதிப்பொருள் பாதிப்பு (Thermal and chemical injury) குறையும்.
- கட்டுரையாளர், கண் மருத்துவர்; drranganathansocial@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT