Published : 13 Sep 2025 07:11 AM
Last Updated : 13 Sep 2025 07:11 AM
எதுக்களிப்பு, உணவு மேலேறி வருவது போன்றவை சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படுகிற பிரச்சினை. ‘ரிஃப்ளெக்ஸ்’ எனப்படும் 'GERD' பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவச் சிகிச்சையோடு உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால், அதன் தாக்கத்தி லிருந்து விடுபட முடியும். அதற்கு இரைப்பை - குடல் சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கும் அம்சங்கள் இவை:
* காரமான, வறுத்த, கொழுப்பும் மசாலாவும் நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
* புதினா, சாக்லெட், குளிர்பானங்கள், சோடா, தேநீர், காபி, சிட்ரஸ் பழங்கள், அவற்றின் சாறுகள், தக்காளி போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும்.
* உணவை 5, 6 வேளைகள் எனப் பிரித்துக்கொண்டு சிறிது
சிறிதாகச் சாப்பிட வேண்டும்.
* குழந்தைகளாக இருந்தால் அதிகமாகச் சாப்பிட அனுமதிக் கக் கூடாது. குழந்தைகளிடம் பசியாக இருக்கிறதா, இல் லையா எனக் கேட்டுவிட்டு உணவு கொடுக்க வேண்டும்.
* இரவு உணவை 7 மணிக்குள் ளாக முடித்துவிட வேண்டும். படுக்கைக்கு 3 மணி நேரத் துக்கு முன்பாக உணவு சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்ட உடனேயே படுக் கைக்குச் செல்லக் கூடாது.
* தூங்கும்போது படுக்கையில் தலை 3 அங்குலம்வரை மேலே தூக்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT